யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தான சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஜப்பான் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Month: October 2019
இலங்கை போரின்போது நடந்தது என்ன? – 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து…
சோசலிஸ்டுகள் அபார வெற்றி இடதுசாரிப் பாதையில் போர்ச்சுக்கல்
போர்ச்சுகலில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் நல இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த சோசலிஸ்டு கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்டோபர் 6 ஆம் தேதியன்று போர்ச்சுகல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில் சோசலிஸ்டு கட்சி 106 இடங் களைப் பெறுகிறது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 85 இடங்கள் கிடைத்திருந்தன. போர்ச்சுகல் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்குழு ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நிலையான ஆட்சி இருந்தது. இந்த முறையும், போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இடதுசாரிக்குழுவுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன. சோச லிஸ்டு கட்சியின் தலைவரும், பிரதம ருமான அன்டோனியோ கோஸ்டா, இந்த இரண்டு கட்சிகளுடனான உறவு தொடரும் என்று அறிவித்துள்ளார்.
ரெலோவை கிழித்து தொங்கவிட்ட சிவாஜிலிங்கம்
வவுனியாவில் அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழ்க் கிராமம்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் கிராமத்தில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்மையால் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் நகர்ப்பகுதியிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் விவசாய கிராமமே புதுவிளாங்குளம் கிராமமாகும்.
தலைமுறை தலைமுறையாக தமிழ்க் குடும்பங்கள் விவசாயத்தை நம்பி தமது ஜீவனோபாயமாக கொண்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் குறித்த கிராமத்தில் தற்போதும் காணப்படுகின்றது.
கிராமத்துக்கு நடுவே சிவன் கோவில் ஓன்று அமைந்துள்ளது. அக் கோயிலை தனியொருவராக பூசகர் பராமரித்து அங்கேயே தங்கி வாழ்கின்றார்.
கோவிலை சுற்றி பனை, மா மரங்கள் சோலை போல காட்சி தருகிறது. மக்கள் குடியிருந்த பகுதிகள் பெரிய மரங்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கின்றது.
மக்கள் குடியிருந்த பகுதியை சுற்றி வயல் நிலங்கள், குளம் என்பன காணப்படுகின்றது. அவ்வாறு இயற்கை எழில் கொஞ்சும் வன்னிவிளாங்குளம் கிராமத்தில் தற்போது ஒருகுடும்பம் கூட குடியிருக்கவில்லை.
விவசாய காலத்தில் மட்டும் யானைகள் மற்றும் வனவிலங்குகளுடன் போராடி வயல் விதைத்து அறுவடையின் பின்னர் குறித்த கிராமத்தில் ஆள்நடமாட்டமே இருக்காது யானைகள், விலங்குகள் மட்டுமே கிராமத்தில் வாழ்ந்து வருவதாக கிராம வாசியொருவர் தெரிவித்தார்.
போர்கால சூழலில் இடம் பெயர்ந்த புதுவிளாங்குளம் மக்கள் கனகராயன்குளம், வவுனியா மற்றும் புலம்பெயர் தேசங்களென இடம்பெயர்ந்து சென்றனர்.
தற்போது மீள்குடியேற்ற காலப்பகுதியில் அடிப்படை வசதிகளான போக்குவரத்து, மின்சாரம், பாடசாலை, வைத்தியசாலை, வீதிகள் சீர் இன்மையால் குறித்த கிராமத்தில் மக்கள் குடியமர்வதற்கு தயக்கம் காட்டிவருகின்றனர்.
தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படும் நிலையில் தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் புதுவிளாங்குளம் கிராமத்தில் மக்கள் மீண்டும் வாழ்வதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
வாழ்வின் பின்னோக்கிய பயணமிது – பெண் போராளியின் வாக்குமூலம்
ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்ட முதல் பெண் போராளிகளில் ஒருவரின் வாக்குமூலம் இது. உண்மைக்கான தேடல் (புளக்ஸ்பொட்) இணையத்தில் பிரசுரமான இந்த வாக்குமூலம், இதனை எழுதிய சிவகாமியின் (புனை பெயர்) அனுமதியுடன் பிரசுரம் செய்யப்படுகின்றது.
சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான். இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு. அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள், வயல்கள், காடுகள், தென்னம் தோப்புகள், தோட்டங்கள் ஆறுகள், சிறிய குளங்கள், கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை.
அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள். எந்த நவீன நாகரீக வாழ்க்கையும் தீண்டாத தூய்மையான இயற்கையாகவிருந்தது அக்கிராமம். கிராமத்தில் ஆரம்ப பாடசாலைகள் இரண்டும் உயர் வகுப்புக்குரிய பாடசாலை ஒன்றுமிருந்தது. மிக முக்கியமாக அங்கு ஆங்கில மொழியின் வாசனை சிறிதாக கூட இல்லையெனலாம். அப்படி இருந்த பாடசாலையில் தான் அம்மக்கள் தம் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகளும் கள்ளமில்லா கல்வியையும் தம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டிய வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்ந்தார்கள். பாடசாலை செல்வது மாலைநேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவியாக தோட்டங்களிலும் வயல்களிலும் உதவியாக இருப்பது போன்ற வற்றில் ஈடுபட்டதால் வாழ்வின் போக்கையும் அதன் தாற்பரியங்களையும் உணர்ந்தவர்களாயிருந்தார்கள் அந்தப் பிள்ளைகள்.
சிவகாமி மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தபடியால் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தன் கிராமத்தில் அமைதியாக வறுமையின் சுவடுகளுடனே வாழ்ந்தாள். படிப்பும் ஓரளவு புரிந்தும் புரியாமலும் தானிருந்தது. பாடமாக்கி ஒப்புவித்தலுக்காக படிக்கவுமில்லை. ஏதோ படித்தாள் வாழ்வில் எந்த இலட்சியமுமில்லை. இளமையில் வறுமை என்பது கொடுமை தான் என்பதை அவளது உள்ளுணர்வுக்குப் புரிந்தது என்னவோ,? சிறுவயதில் தாயாரின் கடுமையான நோயும் அத்துடன் சேர்ந்திருந்த படியால் வாழ்வு என்னவோ இன்பமாக இருக்கவில்லை என்பது என்னவோ உண்மை தான். ஏழ்மையிலும் அவளிடம் ஏதோ ஓர் துடுக்குத்தனமிருந்தது. வாழ்வில் இரு சகோதரர்களை ஆறு மாதத்துக்குள் இழந்தது அவளுக்கு வாழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இளவயது மிகவும் துன்பத்துக்குள்ளாகிய நேரமது அவளுக்கு. தனது இளைய தம்பி அவளின் அன்புக்கும் ஆசைக்குமுரிய கண்ணன். அவளின் தாயார் மிகவும் நோயுற்றிருந்த வேளை அவள் தான் 13 வயது காலகட்டத்தில் தாயாக தன் சகோதரன் சிவகரனை வளர்த்தாள். அவனின் இறப்பும் அவளின் தமையன் விக்கினேஸ்வரனின் இழப்பும் ஆறுமாதங்குள்ளாகவே அவளின் பிஞ்சு உள்ளத்தை வாட்டித் தான் போட்டு விட்டது. ஆனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை யாராலும் தவிர்க்க முடியுமா என்ன? அப்படியே வாழ்வு வசந்தங்களையும் அள்ளித்தருமா என்ன? அது தன் பாதையில் ஓடிக்கொண்டு தானிருந்தது. வறுமையிலிருந்து மீள ஆண்டவனும் எந்தக் கருணையும் காட்டவில்லை. இப்போ அவளுக்கு மூன்று சகோதரிகள். இவளே மூத்தவள். நல்லாகப் படித்து வாழ்வில் ஓர் அரச உத்தியோகத்தைப் பெற்று வீட்டாரின் வறுமைக்கு ஓர் முற்றுப்புள்ளி தேட வேண்டும் என்று ஓர் கட்டத்தில் நினைத்துப் படித்தாள்.
உயர்தரம் படித்த அவளால் மேற்கொண்டு எதுவுமே செய்ய முடியவில்லை. அரசவேலை வாய்ப்பும் கிடைக்க யாரின் ஆதரவோ சிபாரிசோ இல்லை. ஆதலால் அரச உத்தியோகமுமில்லை. அதன் பின் தோட்டம் செய்யத் தொடங்கி மழை பொய்த்து எல்லாம் அழிந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் தாயாரின் நோயும் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கே பல தடவை முயன்றுமிருக்கிறாள் சிவகாமி. அவளைப் பொறுத்தவரையில் வாழ்வு மிகவும் அழுத்தமான கடுமையான பதிவுகளை அவள் வாழ்வில் பதி்த்திருந்தது. சாப்பாட்டுக்கே கஸ்டம். பட்டினி .ஒழுங்காக உடுத்த உடுப்பில்லை. அவள் பாடசாலையில் கல்வி கற்கும் போது அவளின் பாடசாலை சீருடை மிகவும் கிழிந்து நைந்து போய் அதற்கு அவள் ஒட்டுப் போட்டுத் தைத்திருப்பாள். ஓர் முறை அவள் படித்த பாடசாலைக்கு நாட்டின் அரசியல் பிரமுகர் ஒருவர் வந்தார். அப்போது அவளிடம் காலுக்கு வெள்ளைப் பாதணி சப்பாத்து வாங்க காசில்லாமல் அவள் அந்த பிரமுகரின் வருகையின் போது மக்கள் கூட்டத்தினரோடு சேர்ந்து அந்த பிரமுகரின் வருகையை எதிர்கொண்டு ரசித்தாள்.
இப்படியான வாழ்வில் சிவகாமி வாழ்ந்த காலத்தில் தான் நாட்டில் விடுதலைப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்திருந்தது. விடுதலையைப்பற்றி எதுவித அறிவுமற்ற அவள் அவளின் தோழியின் உதவியுடன் அதில் இணைந்தாள். எதுவுமே தெரியாத அவள் எந்த விடுதலை இயக்கத்தில் இணைகிறாள் என்றே தெரியாது. அவளின் தோழியுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறினாள். அவளைப் பொறுத்தவரை அவள் எல்லாவற்றிலும் தோற்று வீட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியில் வெளியேறியது தான். எந்தக் கொள்கையோ பற்றோ அன்றில் விளக்கமோ இல்லை. சொந்த மண்ணிலிருந்து அவள் வேறு நாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டாள். ஆரம்பத்தில் அவளால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் சாப்பிடும் ஒவ்வொருகணமும் தன் குடும்பத்தார் சாப்பி்ட்டார்களா என்று ஏங்கி கண்ணீர் விட்டிருக்கிறாள். வாழ்வு வடுக்களை மட்டுமல்ல ஆறாத காயங்களையும் சேர்த்து விடுவது என்னமோ உண்மை தான்.
சிவகாமி தனக்கான தன் பெயரை இயக்கத்தில் மாற்றி வேறு ஓர் அடையாளப் பெயருடன் செயலாற்றத் தொடங்கினாள். அங்கு போன பின்பு தன்னை சிவகாமி நிறைய கற்றலுக்குட்படுத்தினாள். தேடலுக்குட்படுத்தினாள். ஆனால் என்னவோ அவளின் சித்தத்தில் தர்மமும் நீதியும் இருந்தது. அப்போது தான் அவளுக்கு வழிகாட்ட சுதாக்கா, மனோ மாஸ்டரின் பேச்சுக்கள் புரிந்தது. பிடித்தும் போய் விட்டது. அவர்களை அவள் நேசித்தது மட்டுமல்ல மதித்து நடந்து அவர்களின் உரைகளைக் கவனித்து தன்னைச் செதுக்கினாள். பல தேடல்களை தானே தேடினாள். ஆனால் விடை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் கூட உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத எண்ணத்தை மட்டும் அவள் சித்தத்தில் பதிய விட்டிருந்தாள்.
இக்கட்டத்தில் தான் அவள் சார்ந்த இயக்கத்தில் உட்கட்சி முரண்பாடு ஏற்பட்டது. அக்கட்டத்தில் தான் அவள் மனோ மாஸ்டரின் கருத்துக்களில் இருந்த நியாயத்தைப் புரிந்து மனோ மாஸ்டருடன் பிரிந்து சென்ற குழுவுடன் இணைந்தாள். இந்த நேரத்தில் அவள் தன்னை ஓர் கருத்தும் இலட்சியமும் கொண்ட ஓர் போராளியாக சீரமைத்திருந்தாள். அந்த நேரம் அவள் தமிழ் சிங்களம் முஸ்லீம் என்று பிரித்துப்பார்க்காமல் எல்லோருமே மனிதர்கள் தான் எல்லோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு அவர்கள் பெறவேண்டும் என்பதிலும் இதை யாராலும் தட்டிப்பறிக்கவோ திருடவோ முடியாது என்பதை உணர்ந்திருந்தாள். உட்கட்சிப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போது சிவகாமியுமிருந்தாள். வெற்றி பெற்றது என்பதை விட அக்குழு அதை நடத்தி காட்டியது. அப்படியான ஒரு முற்போக்குக் குழுவில் சிவகாமி இருந்து நிறையவற்றைக் கற்றாள். எதிர்காலத்தில் அக்குழுவினருடனேயே இணைந்து மக்களுக்கான விடுதலைக்கு உழைக்க வேண்டுமென்பதில் குறியாயிருந்த சிவகாமிக்கு அந்த விடுதலையில் தன்குடும்பமும் அதைப் போன்ற குடும்பங்களும் வசந்தத்தைப் பெறும் என்று பெரிய எதிர்பார்ப்பிருந்தது. அந்த நேரம் அந்த சிந்தனை அவளை மிகவும் சந்தோசத்தின் உச்சிக்கு அழைத்து தான் சென்றிருந்தது. அது மிகவும் கற்பனை என்பதை அவள் பின்னாளில் உணர்ந்து குமுறி அழுதிருக்கின்றாள்.
தான் சார்ந்த முற்போக்குக் குழுவுக்கு சரியான தலைமை மனோ மாஸ்டர் என்பது அவளுக்குத் தெரியும். அப்போது தான் அந்த கொடூர துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கொடூரப்புலிகளால் மனோ மாஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டது. அவ்வேளை அந்தக் குழுவில் எல்லோருமே திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட ஓர் உணர்வோடு செயலற்றிருந்தார்கள். அது மிகவும் வேதனை மிகுந்த காலகட்டம். போராளிகளினது நிலை ஒரு புறம், சரியான தலைமையை தமிழ்மக்கள் இழந்து விட்டது மிகவும் பேரிடியாகவே அவள் அதைப் பார்த்து மிகவும் அழுதாள். வேறொர் நாட்டில் சாப்பாட்டுக்கும் இருப்பிடத்துக்கும் மிகவும் கஸ்டமான நிலையில் மனோ மாஸ்ரின் தம்பி ராஜனும், ரஞ்சித்தும் ஏனைய தோழர்களும் பெண் போராளிகளை மிகவும் நல்ல முறையில் பாதுகாத்தார்கள். மனோ மாஸ்டரின் அக்காவின் கழுத்து தங்கச்சங்கிலியைக் கூட விற்று சாப்பாட்டுக்கு பயன்படுத்தினார்கள். மறக்க முடியாத எதையும் எதிர்பார்க்காத இவ்வுதவிகள் இன்றும் நினைவு கூரப்பட்டு நன்றிக்குரியவையாக பேணப்படுகிறது சிவகாமியின் இதயத்தில். மனோ மாஸ்டரின் மரணமும் சரியான வழிகாட்டலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல பொருளாதார வசதியோ பாதுகாப்பு வசதியோ இல்லாத காரணத்தால் சிவகாமியினதும் அவளின் முற்போக்கு சிந்தனையாளர்களின் கனவும் எல்லாமே அவர்கள் எல்லோரையும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பி விடத்தூண்டி விட்டது. உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை மட்டும் சுமந்தபடி வாழ்வு மிகவும் வரட்சியாக ஓடவும் தான் தொடங்கியது எல்லோரையும் போல் சிவகாமிக்கும்.
சிவகாமி தான் தனது போராட்டத்தை தொடர முடியாமல் திரும்பி நாட்டுக்கு வந்த நேரம் அவளின் தாயார் இறந்து பதினாறு நாட்களாகி விட்டிருந்தது. மிகவும் வேதனையையும் துன்பத்தையும் எதிர் கொண்டு சுக்கு நூறாகியிருந்தாள். வீட்டின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமாக இருந்தது. ஏதாவது வேலை தேட வேண்டும் வீட்டைப் பார்க்க வேண்டுமென்ற நிலையில் மீண்டும் தோட்டம் செய்யத் தொடங்கினாள். அதிலும் முன்னேற முடியவில்லை. சிறு சிறு தொழில்கள் செய்து பார்த்தாள் எதிலும் முன்னேறி குடும்பத்துக்காக எதையும் செய்ய முடியவில்லை. மிகவும் வெறுத்த நிலையிலிருந்த போது தான் ஓர் மருந்தகத்தில் முந்நூறு ரூபா சம்பளத்தில் வேலை கிடைத்தது. அப்போது விடுதலை இயக்கங்கள் பல இருந்த காலகட்டம். அந்த மருந்தகமும் ஓர் விடுதலை இயக்கத்தின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. ஏதோ ஓர் நிம்மதியுடன் வருமானம் குறைவு என்றாலும் அந்த மருந்தகம் அந்தக் கிராமத்துக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் விடயமாக இருந்தது. அது ஓர் மக்களுக்கான சேவையுமாக இருந்தது. அதில் திருப்தியுடன் வேலை பார்த்த போது தான் விடுதலைப்புலிகளால் அந்த மருந்தகம் அதன் பெயர் மக்கள் நல மருத்துவச் சங்கம் என்பது புலிகளின் துணைத்தளபதி சுசிலனால் அடாவடியாக கைப்பற்றப்பட்டது. சிவகாமியிடமிருந்து பல விளக்கங்கள் கூறப்பட்டும் அந்த கொடிய மிருகமான சுசிலனால் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் எந்த விளக்கமுமில்லாமல் அந்த கிராமத்துக்கான சேவை நிலையமான அந்த மருந்தகம் தடைசெய்யப்பட்டது. உண்மையிலேயே அந்த மருந்தகம் தாழ்த்தப்பட்ட சாதியினர் பத்து பேர்கள் கொண்ட ஓர் குழுவினரால் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க அந்த பத்து பேரின் பணம் தான் முதலீடு. ஆனால் EPRLF இல் இருந்த ஓர் போராளி அவர் சிவகாமியின் ஊரைச் சேர்ந்த ஓர் முற்போக்குப் போராளி சுந்தர் என்ற அமலனின் ஆலோசனையின் பெயரில் கிராமத்தின் நன்மை கருதி தொடங்கப்பட்ட ஓர் சேவை மையம். அதில் யாருக்கும் எந்தவித இலாப நோக்கமும் இல்லை. முழுக்கு முழுக்க மக்களுக்காக உதவுவதிற்காக தொடங்கப்பட்டு அது நிறைய கடுமையான நோயாளிகளையும் காப்பாற்றியிருந்தது. கடுமையான நோயாளிகளின் அந்த நேர நோயின் கொடுமைகளையும் தீர்த்திருந்தது. அதை பிரபாகரனின் கொடூர மனம் அதிகார வெறிபிடித்த கோழைகளால் தாங்க முடியாமல் தடை செய்யப்பட்டது.
அந்த நேரம் EPRLF தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகளால் அறிவிக்கப்பட்டது. அவ்வேளை சிவகாமியும் கண்காணிக்கப்பட்டாள். தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்த போராளிகள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியற்ற நிலையில் நோயும் தாக்கி காடுகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள். அவ்வேளை சிவகாமியால் சிலர் பாதுகாக்கப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த வேளை தான் புலிகள் காட்டிக்கொடுக்குப்பின் சிவகாமியைக் கைது செய்து 49 நாட்கள் சித்திரவதை செய்தார்கள். உடல் சித்திரவதை இல்லாமல் விசாரணை என்ற போர்வையில் நிறைய மன உழைச்சலை ஏற்படுத்தினார்கள். தனது சொந்தக் கிராமத்திலிருந்து சிவகாமி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் இருபாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணக்குட்படுத்தப்பட்டாள்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் ஆரம்ப காலகட்டத்தில் சிவகாமியிருந்த விடுதலை இயக்கமான TELO விலிருந்து வெளியேறிய சோதியா, தீபா போன்ற பெண் போராளிகளும் சிவகாமியை விசாரணை செய்தார்கள். அவர்கள் பின்பு விடுதலைப்புலிகளுடன் இணைந்து மிக முக்கிய முன்னிலைப் போராளிகளாக அவ்வியக்கத்திலிருந்தார்கள். இவ்வேளை தான் தீபா சிவகாமியை ஆரம்பத்திலேயே இயக்கத்துக்கு கூட்டிச் சென்ற தீபா பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைகுரிய போராளியாக இருந்தபடியாலும் அவரின் சொல்லை வேதவாக்காக எடுத்து பல கொலைகளைச் செய்த காரணத்தாலும் தீபாவின் சிபாரிசின் பெயரில் பிரபாகரன் சிவகாமியை யாழ் இருபாலை பெண்கள் முகாமில் வந்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேர சந்திப்பின் போது பல விடயங்கள் பேசப்பட்டது. சிவகாமி ஓர் பெரிய அறிவாளியோ நிறைய கருத்துக்களைக் கொண்ட ஓர் தியாகியோ அல்ல. ஆனாலும் துடுக்காக கருத்துக்களைக் கூறும் ஓர் வெளிப்படையான துணிவுள்ளவள் என்பது பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியிருந்த படியால் தான் பிரபாகரன் சிவகாமியைச் சந்திக்க வந்த நோக்கமே. வேறு எதுவுமல்ல. இதில் பிரபாகரனுக்கு தனது இயக்கத்தை மேலும் மேலும் நம்பிக்கைக்குரியவர்களை வைத்து விரிவுபடுத்த வேண்டிய கட்டமிருந்தபடியால் தீபா போன்ற சொல்வதைக் கேட்டு நடக்கும் மந்தை போல் சிவகாமியையும் பிரபாகரன் நினைத்திருக்கலாம். அவ்வளவே. மேலும் சுவாரசியம் சிவகாமியை பிரபாகரன் பேரமும் பேசினார். உயர்பதவிகள் தருவாதாக மேற்படிப்பு படிப்பிப்பதாக.தனக்கு தேவையானவர்களை தன்னோடு சேர்ப்பதற்கு அவர் பலரிடம் பேரம் பேசியிருப்பார் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட போராளிகளினதும் அனுபவமாயிருக்கும் என்பது சிவகாமியின் ஆழமான கருத்து.
சிவகாமி புலிகளின் சிறையில் அரசியல் கைதிகயாக இருந்தபோது அவளுடன் வேறு அரசியல் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அது ஓர் சிறிய அறை எல்லாப்பக்கமும் அடைக்கப்பட்டிருந்தது. அதில் யன்னலில் மாத்திரம் ஓர் சிறிய வெடிப்பிருந்தது. அதிலிருந்து வெளியில் நடப்பதை ஓரளவு பார்க்கக்கூடியதாக இருந்தது. பிரபாகரன் சிவகாமியைச் சந்திக்க வந்தபோது அவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடனேயே இருந்தார். அறைக்கு வெளியில் அவரின் பாதுகாவலர்கள். ஒரு மணிநேர பேச்சுக்கிடையில் பிரபாகரன் தண்ணீர் குடித்தார். பின்பு ஒருமுறை மருந்து அவரின் பாதுகாவலர்களிடமிருந்து கொடுக்கப்பட்டது. அவர் அந்த பெண்கள் முகாமிலிருந்தே எதையும் வாங்கி குடிக்கவோ சாப்பிடவோ இல்லை. இது 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு. பிரபாகரன் அந்தக முகாமுக்கு வர முன்பே சிவகாமிக்கு முகாமின் தலைமைப் போராளியினால் அறிவிக்கப்பட்டது. பெயர் சுதா மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுதா. மிகவும் அமைதியான சுபாபமுடையவர். இவ்வளவு காலமும் அண்ணன் அங்கு வரவில்லை உங்களுக்காகத் தான் வருகிறார். சந்திக்க வருகிறார் என்று சிவகாமிக்கு சொன்னார். மிகவும் பெண்மையும் தாய்மையும் அன்பும் நிரம்பிய அந்த சுதா போன்றவர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் துரதிஸ்டமே. ஏனெனில் பெண்மையென்பது எதையும் அழித்து சீரழிக்காது. அது தாய்மையின் வெளிப்பாடு இயற்கையின் கொடை. எதிரியானலும் அதுவும் ஓர் உயிரே. அதை அழிக்க ஆயுதமேந்தியது எமக்கேற்பட்ட அதாவது தமிழ்மக்களுக்கேற்பட்ட துன்பியலா இல்லை உலக வல்லரசுகளின் திணிப்பா என்பது ஆழமான நோக்கோடும் கலந்துரையாடலோடும் அணுகி புரிதலுக்குட்படுத்த வேண்டிய விடயம். பிரபாகரனுடனான சந்திப்பின் போது விடுதலைப்புலிகளுடன் இணைந்து வேலை செய்வதை சிவகாமி தனது குடும்பத்தின் நிலையைப் புரிய வைத்து மறுப்புத் தெரிவித்தாள். ஆனால் உண்மையிலேயே சிவகாமிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கொள்கையிலோ நடைமுறையிலோ எந்த வித உடன்பாடுமில்லை. கொலைதான் எல்லாவற்றுக்கும் முடிவு சொல்லும் என்பதும் ஆயுதத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று கருதும் கொலைக்குழுவுக்ககும், மனோ மாஸ்டர் போன்ற உன்னத மனிதர்களால் ஆயுதமென்பது யாருக்கு எதிராக தூக்க வேண்டும் அப்பாவி தனது சகோதர இனத்துக்கெதிராகவா இல்லை தன் எதிரிக்கு எதிராகவாக எதிரிக்கு எதிராகவும் கடுமையாக பயன்படுத்தும் கட்டத்தில் தான் அதை தூக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டது. அது அப்படியான ஓர் உன்னத பாசறை. அதிலிருந்த நேர்மையானவர்களால் எப்போதுமே புலிகளுடன் இணைந்து செயல்பட முடியாது. ஆனால் இதில் விதிவிலக்காக சோதியா தீபா சுகி வசந்தி சாந்தி சுபாங்கி போன்ற சிவகாமியுடனிருந்த பெண்போராளிகள் இணைந்தது என்பது துரதிஸ்டம் தான்.
இந்தப் பிரபாகரன் – சிவகாமி சந்திப்புக்குப் பின் சிவகாமி ஓரளவு வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டு முகாமில் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டாள். மனோ மாஸ்டர் கொலைக்கு, சில போராளிகளின் கொலைக்கு பிரபாகரனால் சிவகாமிக்கு மிகவும் சின்னத்தனமான காரணங்கள் கூறி நியாயப்படுத்தப்பட்டது. அப்போது என்னால் உங்களுடன் இப்படியும் பேச முடியும் ஆயுதத்தாலும் பேச முடியும் என்று பிரபாகரனால் சிவகாமி அச்சுறுத்தப்பட்டதும் கூட நடந்தது. எப்படியாவது வெளியேறி விடவே ண்டுமென்பது அவளின் நோக்கம்.
அந்த 49 நாட்கள் சிறைவாசத்தின் போது சில காட்டிக்கொடுப்பவர்கள் என்று ஓர் நள்ளிரவில் 3 பெண்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஓர் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட படித்த பெண். அவர் அங்கிருக்கும் வரைக்கும் யாருடனும் பேசவேயி்ல்லை. மற்ற பெண்கள் இரவு உடைகள் மிகவும் கிழிந்த நிலையில் முகமெல்லாம் காயங்களுடன் கொண்டு வரப்பட்டாரார்கள். அப்போது அடைத்து வைத்திருந்த அறைக்குள்ளேயே முகாமின் தலைவி சுதா என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது அந்தப் பெண்களில் ஒருவர் அண்ணாமார் அதாவது ஆண் போராளிகள் இப்படிச் செய்ததாக கூறிவிட்டார். கொண்டு வரும்போது வாகனத்தில் அப்படி கீழ்த்தரமாக நடந்திருக்கிறார்கள் அந்த ஆண் போராளிகள். அதை பின்பு அந்த பெண் விரிவாக நடந்ததைக் கூறினார் சிவகாமி போன்றவர்களுக்கு. புலிகளின் பெண் போராளியான ரஜனி என்பவர் சிவகாமியை விட வயதும் குறைவு அவர் ஓமந்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எப்போதும் கைதிகளை முறைப்பாகப் பார்ப்பதும், உங்களுக்கெல்லாம் என்னடி தினவெடுக்கிறதா என்று ஏசுவதுண்டு. எப்போதும் ஓர் அதிகார கொடுமையான தோரணையுடன் பார்க்கவே பயமாக இருக்கும்படி நடந்து கொள்வார். கையில் பெரிய கம்புடனேயே கைதிகளைப் பார்த்து மிரட்டுவார். இவர்களெல்லாம் பெண்ணினத்துக்கு இழுக்கானவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் மூளைச்சலவை செய்யப்பட்ட மனது பவவீனமானவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும் அவர்களின் கருத்தை வேதவாக்காக எடுத்து நடக்க மட்டும் தான் முடியும். அந்தப் பெண்ணைப் பார்த்து சிவகாமிக்கு பயமென்றாலும் இரக்கமும் கூட இருந்தது. அந்த உண்மையைக்கூறிய பெண் கடுமையான விசாரணக்குட்படுத்தப்பட்டார். அங்கு விசாரணை என்பது ஒருவரினால் நடத்தப்படுவதில்லை. பலபேரினால் பலமுறைகள் நடத்தப்படுவது. மிகவும் கொடுமையாக இருக்கும். அப்படியே அந்தப் பெண்ணையும் விசாரணை என்ற போர்வையில் விசாரித்தார்கள். இந்த விசாரணை அறை என்பது சிவகாமி போன்றவர்களை அடைத்து வைத்த அறைக்குப் பின்பக்கத்தில் இருந்த நீண்ட பெரிய அறை அது யாழ்ப்பானத்தில் அதிகமான வீடுகளில் இருக்கும் போலும். சிறை அறைக்கும் விசாரணை அறைக்குமிடையில் ஓர் யன்னலுமிருந்தது. அது மூடித்தான் இருக்கும். அந்த விசாரணை அறையில் அந்தப் பெண்ணை அடித்து சித்திரவதை செய்ய அந்தப்பெண்ணின் அவல அலறல் இன்றும் சிவகாமியால் மறக்க முடியாது. அவ்வளவு கொடூரம் அது. சித்திரவதையில் கால் அடித்து முறிக்கப்பட்டும் விட்டது. அந்தப் பெண் அந்த விசாரணை அறையிலேயே விடப்பட்டும் விட்டார். அதன் பின்பு அந்தப் பெண்ணை சிவகாமி இரண்டு தடவை பார்த்திருக்கிறாள். தன்னை விடுவதாக கூறியிருந்தார் அந்தப் பெண். தான் தன் இரு பிள்ளைகளையும் பார்க்க வேணும் என்றும் சக கைதிகளிடம் தெரிவித்திருந்தார் அப்பெண். அவர் ஏன் சந்தேகிக்கப்பட்டாரென்றால் ஓர் வயதானவரை கொழும்புக்கு ஓய்வூதியம் எடுக்கக்கூட்டிச் சென்றபடியால் தான் சந்தேகம். வேறு எதுவுமே அப்பெண் செய்யவில்லை. கடைசியில் அவரிடமிருந்து எல்லா உண்மைகளையும் எடுத்து விட்டு அந்தப் பெண்ணை துரோகி எனப்பட்டம் சூட்டி சந்தியில் கட்டி சுட்டுக்கொன்றார்கள். அப்பெண் உரும்பிராயைச் சேர்ந்த நடுத்தர வயதுடையவர் அப்போது. மற்றப்படி எந்தத் தகவலும் சிவகாமிக்குத் தெரிவில்லை. அவரைப்பற்றிய உண்மையை அவர்களின் பிள்ளைகளுக்காவது தெரிவிக்க சிவகாமி நீண்டகாலத்தின் பின்பு புலம்பெயர் தேசம் ஒன்றில் உரும்பிராயைச் சேர்ந்த ஓர் வேறு பெண்ணிடம் கூறினாள். அப்போது அந்தப் பெண் கூறிய வார்த்தை அவரின் பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும், தாய் துரோகி என்பதை நம்பி விட்டதாகவும் கூறியிருந்தது வருத்தத்துடன் பதிவுசெய்ய வேண்டியது. ஒருதாயை இழந்தது மட்டுமல்ல நடத்தை கெட்டவள் என்றும் முத்திரை குத்தப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. கடைசி நாள் சுடக்கொண்டு போகும் நேரத்தில் கண்களெல்லாம் கட்டிய பின் நீங்கள் என்னை விடுதலை செய்வதாகக் கூறினீர்களே ஏன் என்னை இப்படி செய்கிறீர்கள் என்ற வார்த்தையும் ஓலமும் சிவகாமிக்கு மாளாத்துயரம் வாழ்வில். இதுதான் புனித விடுதலை. மக்களுக்காக ஆயுதமேந்திய அராஜகக்கும்பலின் அட்டூழியம். தம்மைக் காப்பாற்றி அதிகார சிம்மாசனத்தில் வீற்றிருக்க செய்த கொலைகள் எதுவும் சிம்மாசனத்தையும் கொடுக்கவில்லை. விடுதலையையும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.
மல்லி ,விசு ,மாத்தையா போன்றவர்கள் மிகவும் கொடுமையானவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரலே சிறைக்குள்ளிருக்கும் போது அந்த வெடிப்பு யன்னல் வழியாக பார்த்துக் கேட்கும் போது பயங்கரமாகவிருக்கும். சிவகாமி இவர்கள் வந்தால் வெளியில் நிற்பதைப் வெடிப்பினூடே பார்த்தால் இரண்டு காதுகளையும் மூடிவிடுவதுண்டு. கடைசியில் மல்லி என்பவர் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். விசு கொழும்பில் கொலை செய்யப்பட்டார். மாத்தையாவுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த விடயம். இவர்களை நினைக்கும் போது பயமேற்பட்டது உண்மை. ஆனால் இவர்களெல்லாம் அறியாமையில் சிதைந்து போனவர்கள். நிச்சயமாக இவர்களின் ஆன்மா நிம்மதியுற வேண்டும்.
அந்த 49 நாட்கள் சிறைக்குப் பின் சிவகாமி விடுதலை செய்யப்பட்டாள். ஆனால் இந்த கேடுகெட்ட சமுகம் மிகவும் கேவலமாகப் பார்த்தது. புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த போது மொட்டை அடித்து துரோகியைக் கொன்று விட்டதாக அவளின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டதுமுண்டு. வறுமை அதனிடையில் இப்படியொரு துர்ப்பாக்கிய நிலை. சமூகத்தின் கேடுகேட்ட பார்வையும் விமர்சனமும் சிவகாமியை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்ல மிகவும் தடையாக இருந்தது என்னவோ உண்மை தான். உண்மையையும் நீதியையும் நீ விரும்பினால் இப்படியான தண்டனையும் துன்பமும் தவிர்க்க இயலாது என்னவோ சமூகத்தில் எழுதாத சட்டம் என்னவோ?
-தொடரும்
தமிழ் சமூகத்தின் சாதி கொடுமைகள்
சிறுவர் தினம்…ஆசிரியர் தினம்
இன்றைய ஆசிரியர் தினத்தில் நிலாவெளி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையில் மாணவர்களின் வாழ்வியலுக்கான அறத்தினை நெறிப்படுத்துகின்ற, தன்னலமற்ற சேவையை வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு..ஐப்பசி 01ம் திகதி கடந்து சென்ற சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாகவும், இன்று குழந்தைச்செல்வங்களுடன் இணைந்திருந்து கொண்டாடியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இச்சந்தர்ப்பத்தில் எமது தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்டச்செயலாளரும், நகரசபை உறுப்பினரும் ஆகிய சத்தியன் அவர்களும் கலந்துகொண்டார்.