காலி மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் நிலைமை பின்தங்கியுள்ளது. தமிழ்ப் பிள்ளைகள் கற்பதற்கு போதிய தமிழ்ப் பாடசாலைகள் இல்லை. அதனால் பெருமளவு தோட்டப்புற தமிழ்ப் பிள்ளைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் இணைந்து அம்மொழியிலேயே கற்கின்றனர். கணிசமான பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளில் கற்று வருகின்றனர்
Month: November 2019
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு
அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அரசியலில் மைத்திரி நீடிப்பார்’
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்று, அக்கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்
தோழர்களை நினைவுகூர்வோம். …….
தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .
கைகளால் கழிவகற்றுவோருக்கு எப்போதுதான் விடிவுகாலம்?
மற்றொரு மரணம்; பாதாளக் குழியில் இறங்கி கழிவகற்றும்போது விஷவாயு தாக்கி தமிழ்நாட்டில் மற்றொரு மரணம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. கழிவுகளை அகற்றும்போதான உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ‘கைகளால் மனிதக் கழிவகற்றுவோர்’ என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்கிறது இணையம். ஏன் இந்தத் தனிப் பெரும் பெருமை? ஏனென்றால், இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர்கொண்டிருப்பதால்; சாதியம் இந்து சமூகம் மட்டுமே சுவீகரித்திருக்கும் ஆயிரம் ஆண்டு கால மாண்பு என்பதால்; தீண்டாமை நம் தனித்துவம் என்பதால்! ‘சாதிய சமூகம் தன் பல்லாண்டு கால மாபாதகத்துக்கு மன்னிப்புக் கேட்பதுடன்தான் இத்தகைய முயற்சிகள் தொடங்க வேண்டும்’ என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன். இக்கேவலத்திலிருந்து மீட்கப்படுவோரின் மறு வாழ்வுக்காக அவர் முன்வைத்த பரிந்துரைகளுக்கு இன்னும் முகங்கொடுக்கவில்லை. அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.
துண்டு பிரசுரங்களுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது
எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் மீண்டும் இழுபறி
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று (27) மாலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று (28) நண்பகல் இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இது அமையவுள்ளது. இதன்போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் இலங்கை ஜனாதிபதி ஈடுபடவுள்ளார் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.