(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு.
Month: December 2019
பாரததேசத்தை அண்ணாந்துபார்த்து அகமகிழ்ந்தோம்..இன்று இந்த நிலைகண்டு
அமைச்சர் டக்ளஸ் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
(Subamangala Saththiyamoorthy)
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை பதவி விலக வேண்டும் என தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சும(த)ந்திரன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சா இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது என கூறிவிட்டாராம்.
சாதிய வெறி
(Pushparani Sithampari)
இலங்கைத்தமிழர்களிடையே சாதிவெறி ஒழியவில்லை என்பதுபற்றி நானே நிறைய எழுதியிருக்கின்றேன். இன்னும் எழுதுவேன். ஆனால் தமிழ்நாட்டைவிட அதிகம் என்பதை மறுக்கின்றேன். தமிழ்நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருப்பதுபோல சாதிவெறியில் படுகொலைகள் செய்வது இப்போது நினைத்தே பார்க்க முடியாத காரியம்.
இராஜராஜ சோழனை நாம் கொண்டாட வேண்டுமா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல; அதில் பதியப்படுவனவும் விடுபடுவனவும் திரித்தோ, புனைந்தோ எழுதப்படுவனவும் எவையெவை என்பது, அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. அண்மையில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல; இருண்டகாலம் என்றும் அவருடைய காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு, பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்த கருத்து, மிகுந்த எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.
தாது வருடப் பஞ்சம்
மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?
தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –
1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது –
கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது –
மணல் கொள்ளையர்களுக்கு உதவ மறுத்த ஒப்பந்தக்காரர்களுக்கு அச்சுறுத்தல்
மனிதம் இங்கும் வாழ்கின்றது
எப்படி சொல்வது தன் மகளிடம் ..?”
– தவித்தார் அந்த தந்தை .
அவர் பெயர் அஜய் முனாட் .
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் .
அவரது மகள் ஸ்ரேயாவுக்கு திருமணம் .
தேதி எல்லாம் நிச்சயிக்கப்பட்டு விட்டது .
கல்யாணத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டிருந்தார் அஜய் . இது குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும்.
அஸ்ஸாமில் தீவிரமடைந்துள்ள போராட்டம்
தூக்குத் தண்டனை!
12 வருடங்களுக்குப் பின்னர் நீதித்துறை அளித்த தீர்ப்பு!
தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷர்ரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 75 வயதான பர்வேஸ் முஷர்ரப் பாகிஸ்தானில் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அந்நாட்டு ஜனாதிபதி பதவியில் இருந்தார்.