திருகோணமலையில் தோழமை தினம்

திருகோணமலை தோழர்களினால் மூதூர் முத்துச்சேனை R.D.S கட்டடத்தில் தோழமை தினம் நடத்தப்பட்டது.
தோழர் பத்மநாபா 30 வருடங்களுக்கு முன் தீர்க்க தரிசனமாக எடுத்த முடிவின் அமைவாக 13வது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு வடகிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அது இயங்குவதற்கு தமிழ் தலைவர்கள் யாவரும் ஏற்று கொள்ளாததன் விளைவு குறுகிய காலத்தில் மாகாண அரசு சிதைக்கப்பட்டு விட்டன. அன்று மறுத்த தலைவர்களும் 13வது திருத்த சட்டத்தை இன்று உள்ள தலைவர்களும் அமுல்படுத்துமாறு போராட்ட வீரர்கள் போல் மாயை காட்டுகிறார்கள். இலகுவாக கிடைத்ததை போட்டு உடைத்துவிட்டு ஒட்டுவதற்கு பாடு படுவதாக பாசாங்கு செய்கின்றனர். இவை யாவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து நினைவு கூறப்பட்டது .

“தமிழ்த் தேசியக் கட்சி” உதயம்

“தமிழ்த் தேசியக் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை, இன்று (15) அங்குரார்ப்பணம் செய்துவைத்த, தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சிகள் பல இணைந்து, புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத்தலைமையை உருவாக்கவுள்ளோம் என சூளுரைத்தார்.

தமிழகத்தில் தமிழ் தேசியம்

(பாவல் சங்கர்)

//இங்கே தமிழர் தேசிய அரசியல் மூன்று விதமான நபர்களால் மூன்று விதமான காரணங்களுக்காக பேசப்பட்டு வருகிறதை பார்க்க முடிகிறது……….??

காற்றாலைகள்

(வடகோவை வரதராஜன், மோகன் சிவராஜ)

அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் .

மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

மண் மீட்பு……?

(சாகரன்)

அண்மையில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபாய ராஜபக்ஸ அரசு ஒரு கட்டுப்பாட்டுத் தளர்த்தல் அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அது இனிவரும் காலங்களில் கட்டுப்பாடற்ற முறையில் மணல் அள்ளலாம் என்பதே அது. கட்டுப்பாடுகள் இருந்த போதே தமது மணல் அள்ளலை ‘வெற்றிகரமாக’ செயற்படுத்தி வந்த ‘டிப்பர்’கள் தற்போது ஒரு நாளில் சில இடங்களில் 350 இற்கு மேற்பட்ட அள்ளல்களை மேற்கொள்கின்றனர்.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

(கே. சஞ்சயன்)
இந்திய அரசாங்கத்தால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள், தமது நிலைப்பாட்டுக்கு கூறுகின்ற முக்கியமான இரண்டு காரணங்களில் ஒன்று, இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். அடுத்தது, முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும்.

தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை

(க. அகரன்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளை நாடி பிடித்து உணர முடியாத வகையில் இருப்பதான தோற்றப்பாட்டில், பல தமிழ் அரசியல் தலைமைகள் இருப்பதை உணர முடிகின்றது.

இது விளையாட்டு அல்ல; விபரீதமானது

(காரை துர்க்கா)
அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள்.