(சாகரன்)

எல்லா தந்தையருக்கும் தனது மகள் என்றால் ஒருவகையான விசேட உறவு பாசப்பிணப்பு இருப்பது இயல்பானதே. பிறக்கும் முதல் குழந்தை மகளாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்புதான் தந்தையரிடம் இருக்கின்றது. என் வீட்டிற்கு ஒரு தேவதை புதிதாக வரவேண்டும் என்று மனதிற்குள் குதூகலித்து இருப்பர் தந்தையர்.