உலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சில பழக்க வழக்கங்கள், முறைமைகள் போன்றவற்றில் இருந்து மாற்றமடையாமல், மீட்சிக்கு வழி இல்லை. இலகுவில் மாற்றங்களுக்கு உள்ளாக, மனித மனம் தயாராக இருப்பதில்லை. இதன் பாதகமான விளைவுகள் எல்லாவற்றையும் அது, தொடர்ந்து அனுபவித்து வருகிறது.

சுலைமானி படுகொலையின் வழி ஈரான் ஜனநாயகத்துக்கு ட்ரம்ப் இழைத்த கேடு என்ன?

(ஸ்டான்லி ஜானி)

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியமான ராணுவத் தலைவர் காசிம் சுலைமானியின் மரணம், அந்நாட்டு அரசுக்கு மிகப் பெரிய இழப்பு. மேற்காசியா முழுவதற்கும் ஈரானின் அதிகாரம் பரவுவதற்கான வழியைக் கண்டுபிடித்ததல்லாமல் அதை பரவச் செய்தவர் அவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிப் படையின் மூலம் உளவு வேலையையும் புறப்பாதுகாப்பையும் அவர் நிர்வகித்துவந்தார். பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே ஜனவரி 3-ல் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்

(வி. சபேசன்)
·
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறாள். இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்கின்ற ஆத்திரத்தில் கணவனே கொலை செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை பல ஈழத்து சங்கிகள் ஆதரித்து எழுதிக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

ஹிருணிகாவின் பேச்சு ……. (தமிழில்)

(Jeevan Prasad)

இன்றைய பாராளுமன்ற விவாதம் குறித்து நான் பேசப் போவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய திரை நாடகமான பிரிசின் பிரேக் 2 ( சிறை உடைப்பு 2 ) குறித்தே பேசப் போகிறேன். ஒரு சகோதரன் , சிறையிலுள்ள இன்னொரு சகோதரனை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக சில ஒளி நாடாக்களை களத்தில் இறக்கியுள்ளார்.

‘கொரோனா’ வைரஸ் பரவலாமென சீனா எச்சரிக்கை

சீனாவில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸ், தொடர்ந்தும் பரவக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக, அந்நாட்டுச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த வைரஸ் தொடர்பில் இலங்கையிலும் விசேட சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கைச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவி கொலை

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

ஓமான் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியை ஒடுக்கிய ச‌ர்வாதிகாரி க‌பூஸ் ம‌ரணம் குறித்து….

(Kalai Marx)
ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் 50 வ‌ருட‌ங்க‌ள் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌பூஸ் ம‌றைவு குறித்து ஊட‌க‌ங்க‌ள் இர‌ங்க‌ல்பா பாடி ஓய்ந்து விட்ட‌ன‌. அநேக‌மாக‌ எல்லா ஊட‌க‌ங்க‌ளும் அவ‌ரைப் ப‌ற்றி ந‌ல்ல‌தாக‌வே சொல்லி புக‌ழார‌ம் சூட்டின‌. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் ச‌ர்வாதிகாரி என்ற‌ சொல்லை பாவிக்க‌வில்லை. ஏனென்றால் க‌பூஸ் மேற்க‌த்திய‌ நாடுகளுக்கு விசுவாச‌மான‌ அரசிய‌ல் த‌லைவ‌ர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.

கனடா அஞ்சல் தலையும் தமிழ் மரபுத் திங்களும்.

தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு கனடிய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதாக ஒரு கட்டுக்கதை சில இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படுகிறது. இந்த அஞ்சல் தலை மொன்றியால் தமிழர்களின் முயற்சியால் வெளியிடப்பட்டது உண்மை. ஆனால், இது கனடிய அரச நிறுவனமான கனடா அஞ்சல் திணைக்களம் வெளியிட்டதல்ல.

தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தில் அமைப்பு

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன் முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.

பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்..

(Douglas Muthukumar)

இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும்.