(எம். காசிநாதன்)
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று ‘அறிக்கைப் போர்’ வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளூராட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும், இந்தக் குழப்பம் தொடங்கியுள்ளது.
Month: January 2020
துறவறமும் திருமணமும்: பாப்பரசர் எதிர் பாப்பரசர்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலமாற்றத்துடன் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை. ஆனால், இம்மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. மாற்றங்கள் தேவைப்பட்டாலும், தவிர்க்க இயலாததாக இருப்பினும், அவை நிகழாமலும் இருந்திருக்கின்றன. இது மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயமும் அதுசார் அமைப்பும் தொடர்பானது ஆகும்.
‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’
(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான் நிலை?
‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’
(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது…
மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம்; ஜனாதிபதி அதிரடி
மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?
(Shanmugan Murugavel)
சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது.
கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்
(இலட்சுமணன்)
இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது.