காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் “ஈழத்து தலித்திய” நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. “சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே…” என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.
Month: February 2020
கனடாவில் மண் மீட்பு போராட்டம்
(சாகரன்)
அமெரிக்காவை கண்டு பிடித்தார் கொலம்பஸ் என்று நாம் அறிந்தவரால் இவர்களின் வாழ்நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது முதலில். பின்பு வட அமெரிக்காவின் பல பகுதிகளை ஓருங்கிணைத்து உருவான கனடாவில் ரெசிடென்சல் ஸ்கூல்(Residential School என்று ஆரம்பித்து செவ்விந்தியக் குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்.
கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது.
‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்…
E-டிக்கெட் முறை அறிமுகம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்: 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது.
கிழக்கில் அமல், பிள்ளையான், கருணா, டக்ளஸ், கணேசமூர்த்தி, வரதராஜப்பெருமாள் மற்றும் பலர் இணையும் கூட்டு கட்சி உதயம்
(க.விஜயரெத்தினம்)
கிழக்கின் மண்ணை பாதுகாப்பதற்காகவும், கிழக்கு மக்களின் அதிகார மையங்களை பெற்று கிழக்கு தமிழ் மக்களுக்கான எதிர்காலத்தை வழிநடாத்துவதற்காகவும், ஒரே குடையின்கீழ் ஒற்றுமையுடனும், எல்லோரும் பொதுவாக இணைந்து பயணிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்திருந்தார்.
‘சுரேஸுடனான தொடர்பு துண்டிப்பு’
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) செயற்பாட்டுக்கும் தனக்கும் உள்ள செயற்பாடுகளை தனது தனிப்பட்ட நலன் கருதி நிறுத்தியுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.