(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும்.
Month: February 2020
இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது.
சுதந்திர தினம்
காணாமல் போனவர்களின் கண்ணீர்
இலங்கையை ஆட்டிப்படைக்கவுள்ள பொருளாதார நெருக்கடிகள்
‘நிர்பயா’ தூக்கும் டெல்லி தேர்தலும்
(எம். காசிநாதன்)
இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 70 சட்டமன்றத் தொகுகளில் நடைபெறும் அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மத்தியில் வெற்றி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கா அல்லது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கா என்ற எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது.
பாதை சேவை ஆரம்பம்…

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறைக் கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான போக்குவரத்து இழுவைப் பாதை, இன்று (27) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. திருகோணமலை ரொட்டரிக் கழகத்தின் 11 இலட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
’லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கும்’
பொதுத் தேர்தலில், லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண, வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறது எமக்கு வாக்களித்து மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்த அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்தார்.
சோழமுத்தன் உம் பாம்புக் காய்சலும்

(சாகரன்)
50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து கிராமங்களில் எல்லாம் விடியற்காலையில் வண்டில் சில்லு பூட்டிய தகரத்தால் ஆன மனிதனால் இழுத்து வரப்படும் வண்டில் ஒன்று ‘கடக்கட்டி முடக்கட்டி’ என்று தார் பதிக்காத கல்லு வீதிகளின் அதிக சத்தத்துடன் தினமும் வலம் இடமாக வருவதை எம்மவர்கள் தினமும் காணும் நடைமுறையாக இருந்தது.