(Maniam Shanmugam)
உலகையே கொடிய கொரோனா வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய் சூறையாடி வரும் நிலையில், இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆறு தசாப்தகால தூண்களில் ஒருவரும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் மூத்த செயற்பாட்டாளருமான தோழர் நீர்வை பொன்னையன் இன்று (மார்ச் 26, 2020) தனது 90ஆவது வயதில் இலங்கை தலைநகர் கொழும்பில் காலமாகிவிட்டார். அவருடன் எனக்கு 55 வருடகாலமாக இருந்த ஆழமான தோழமையும் நட்பும் காரணமாக அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் எனது மனம் பரிதவிக்கிறது, நெஞ்சு கனக்கிறது. அதற்காகவே இந்தப் பதிவு.
Month: March 2020
கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம்
(கே. சஞ்சயன்)
நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
சீனாவின் காலில் விழுந்தார் ட்ரம்ப்!
(Maniam Shanmugam)
கொரனோ வைரசை “சீன வைரஸ்” என்று கூறி சீனாவைச் சீண்டி கோபமடைய வைத்ததுடன்இ அமெரிக்காவில் வாழும் ஆசிய நாட்டவர்களுக்கெதிராக இனத்துவேசத்தையும் தூண்டிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்பொழுது தனது நாட்டில் அதிகரித்து வரும் கொரனோ வைரசைக் கட்டுப்படுத்த உதவும்படி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உடன் தொலைபேசி மூலம் பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார!.
கொரனா கற்றுத் தரும் பாடம்….. தூய்மைத் தொழிலாளர்களை வாழ்த்தி பாராட்டி நிற்போம் !
ஒரு மருத்துவரின் குரல்…
(Roshan Anthonypillai)
18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Covid19 Specialized Treatment Hospital இற்கு பணியாற்ற செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தேவை உணர்ந்து மனதின் ஆழத்தில் சிறு பயத்துடன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு கடமையாற்ற செல்லுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தேன்.
இலங்கை நிலை!
இலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் நிலைமை பரவாயில்லை என்று சொல்லலாம். இதுவரை காலமும் இருந்த ஊரடங்கு மனோநிலை இப்பொழுது சற்று மாற்றம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. காவல்துறையினர் மிகவும் பொறுப்புணர்வுடன் அவதானமாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் போக்கில் மாற்றத்தைக் காணமுடிகிறது. பொதுநிர்வாகத்துறையினரும் ஊரடங்கின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதை உணரமுடிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீரடையத் தொடங்கிவிட்டது. மக்கள் தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் கைவிடுவதே தற்போதைய தேவை.
வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்
1- உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று வாங்கலாம்.
2.வெதுப்பங்கள் இயங்கலாம். உற்பத்திகளை வீடுவீடாக வாகனங்களில் கொண்டு சென்று விற்கலாம்
3. பல்பொருள் அங்காடிகள் திறக்க முடியாது 500 ரூபா 1000 ரூபா பொதிகளாக்கி வீடுவீடாக சென்று விநியோகிக்கலாம்
அரசாங்கம் + கொரோனா = மக்கள்
(இலட்சுமணன்)
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன.
ஊர்கூடித் தேரிழுப்போம்
கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன.
கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்தோ அது, இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை.