கரோனா வைரஸின் கோரமான ஆட்டத்துக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு 4,825 ஆக அதிகரி்த்துள்ளது.
Month: March 2020
கோவிட்-19 | உலகம் முழுதும் 100 கோடி மக்கள் வீட்டுக்குள் முடக்கம்; கரோனா வைரஸ் பலி 11,000-த்தைக் கடந்தது
அவசர செய்தி
யாழ்ப்பாணம் – செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள பிலதெப்பிய தேவாலயத்தில் பெப்ரவரி 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களை 0212217278 இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்ய கோரிக்கை – மாகாண சுகாதார பணிப்பாளர்.
கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா?
மிக முக்கியமாக கொரனா பற்றி ஆலோசனைகள்
கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.
கொரனா: சமூகப் பொறுப்பை மறந்து பயணிக்கின்றோமா…?
(சாகரன்)
உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை ஐரோப்பா எங்கும் பரப்பி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது. முதலில் ஆரம்பமான சீனா சமூகக் கட்டுப்பாட்டில் தனது கரங்களை இறுக்கப் பிடித்து, இதன் அவசியத்தை தனது மக்களுக்கு தெளிவுபடுத்தி, அங்கீகாரத்தை மக்களிடம் பெற்று, அவர்களிடம் சமூகப் பொறுப்பை உருவாக்கி இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருகின்றது.
கொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை?
(கே. சஞ்சயன்)
நவீன உலகில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாகவும் மனித இனத்தின் இருப்புக்கான பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். குணப்படுத்த முடியாத உயிர்க் கொல்லி நோயாக இல்லாவிட்டாலும், இது பரவுகின்ற முறையும் வேகம்மும் உலகத்துக்கான பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.
தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும்
(இலட்சுமணன்)
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது. இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை வளர்த்துக் கொண்டதாகக் காணமுடியவில்லை. அவை, கடைந்தெடுத்த சுயலாபம் கருதிய நடத்தைகளாலேயே தமக்குள் முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்து உள்ளன.
கொரோனா தொற்று: ‘தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்’
கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள் என்றும் அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையை முன்னெடுங்கள் என்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வுக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.