
உலக சுகாதார மையத்துடன் இணைந்து, ‘வீட்டிலேயே இணைந்திருப்போம்’ (Together at home) என்ற தலைப்பில் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
The Formula
(மு. மதிவாணன்)
எப்பொழுதெல்லாம் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுகிற வைரஸ் நோய்கள் (Zoonotic Diseases) வருகின்றனவோ அந்த நேரத்தில் காட்டுத்தீபோல் வவ்வால்கள் குறித்த எதிர்மறையான செய்திகளும் தேவையின்றி பரப்பப்படுகின்றன. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸும் வவ்வால்களை விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக நிறைய செய்திகள் சமூகவலைத் தளங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. வவ்வால்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி இது.
ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு மேலை வானத்தில் பார்க்காத நீலம் ஒன்று படர்ந்துகொண்டே மெல்ல அடர்வதையும் பார்க்கலாம்.
(சாகரன்)
கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது
கடுமையான தொடர்பு – தடமறிதல் (contact-tracing process) செயற்பாடுகள்:
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொடர்பு – தடமறிதல் செயல்முறை மூன்று படிகளை உள்ளடக்கியது: வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்று சந்தேகிக்கப்படும் 1. நோயாளரை அடையாளம் காணுதல், 2. நோயாளர் பற்றி தகவல்களை திரட்டுதல் மற்றும் 3. நோயாளரைப் பின் தொடர்ந்து அவதானித்தல் ஆகும். கோவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார வல்லுநர்கள், பொதுப் பாதுகாப்புப் பணியாளர்கள், இராணுவம் மற்றும் அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி சமூகத்திலிருந்து விரைவாக இனம் கண்டு தனிமைப்படுத்துவதில் வியட்நாம் அரசு வெற்றி கண்டது.
(சாகரன்)
கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது
வியட்நாம் கையாண்ட அணுகு முறையை சற்று விரிவாக பார்ப்போம்:
ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி, 95.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடான
வியட்நாமில் 268 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் – 19 தொற்றாளர்கள், 171
வைரசில் இருந்து மீட்கப்பட்டவர்கள், 1,35,938 மருத்துவப் பரிசோதனைக்கு
உட்பட்டவர்கள் மற்றும் பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்பன பதிவாகியுள்ளன. கோவிட் –
19 தொற்று நோயால் எந்த மரணமும் ஏற்படாததாகக் கூறப்படும் மிகச் சில
நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி
விடயமாகும்.
(ஏ.சி.எம் பௌசுல் அலிம்)
ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.