அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Month: April 2020
கௌதம் நவ்லக்கா : சில குறிப்புகள்.
(அ. மார்க்ஸ்)
கௌதம் நவ்லக்கா People’s Union for Democractic Rights () அமைப்பில் இருந்து செயல்படும் ஒரு முழு நேர மனித உரிமை மற்றும் சிவில் உரிமைப் போராளி. புகழ்பெற்ற Economic and Political Weekl () இதழில் அவ்வப்போது எழுதி வருபவர். 2018 ஆக 28ல் பிரதமர் நரேந்திரமோடியைக் கொலை செய்ய முயற்சித்தகாக மகாராஷ்டிரப் போலீசால் கைது செய்யப் பட்ட ஐந்து பேர்களில் ஒருவர். எனினும் அவர் அப்போது வீட்டுக் காவலில் வைக்குமாறு ஆணையிடப்பட்டு சிறைவாசம் தவிர்க்கப் பffஅது.
இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சியின் பின்னணி என்ன?
(Maniam Shanmugam)
இலங்கையில் ஜே.வி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) 1971 ஏப்ரல் 05ஆம் திகதி ஆயுதக் கிளர்ச்சி நடந்து இம்மாதம் 05ஆம் திகதியுடன் 49 ஆண்டுகள் – அதாவது ஏறத்தாழ அரை நூற்றாண்டு – முடிவடைந்துவிட்டது. பலத்த உயிர் இழப்புகளுடன் தோல்வியில் முடிவடைந்த அந்தக் கிளர்ச்சி இன்று இலங்கை வரலாற்றின் ஒரு அத்தியாயமாகிவிட்டது.
வியட்நாமின் தவப்புதல்வன்
(Maniam Shanmugam)
நிகுயென் வான் ட்ரோய் (Nguyen Van Troi) 24 வருடங்கள் (1940 – 1964) மட்டுமே வாழ்ந்த ஒரு வியட்நாமிய இளைஞன். அவர் அமெரிக்க – தென் வியட்நாம் கூட்டுப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு ஏறத்தாழ 56 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் இன்றும் வியட்நாமிய மக்களின் நெஞ்சில் ஒரு தேசிய வீரனாக வாழ்ந்து வருகின்றார். வயதில் மிகக் குறைந்தவரான இந்த இளைஞன் அப்படியான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு என்ன காரணம்?
மக்களை மீட்க….உயிர்த்து எழவில்லை ஞாயிறு
போராளி விஜயனின் மரணம்
(Varathar Rajan Perumal)
எனது பால்ய வயது நண்பன் விஜயன் இன்று இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டு சில நிமிடங்கள் எனது நெஞ்சுக்குள் ஒரு வலி. விஜயனும் நானும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் பக்கத்து வீடுகளில் சில நாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள். எங்களது 17/18 வயதுகளில் நாதன் என்ற இன்னொரு நண்பனும் நாங்கள் மூவருமாக பல்வேறு வகையான உடற்பயிற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தோம். எங்களது வீடுகளுக்கு அண்மையில் கெற்றப்போல் அடிப்பதில் கெட்டித்தனம் கொண்ட சில சிறு பையன்கள். அவர்களிடம் 10 சதத்துக்கு ஒரு அணில். 20 சதத்துக்கு ஒரு வௌவ்வால் என பல தடவைகள் வாங்கி ரகசியமாகி உரித்து சுட்டுத் தின்ற நினைவுகள்.
அலட்சியம் வேண்டாம்.. கன்னத்தில் அறைந்ததை போல் கூறிய சிங்கள மருத்துவர். கட்டாயம் படிக்கவும் அனைவருக்கும் பகிரவும்.
வெருகல் மறந்த சகோதர படுகொலைகள்
(பீமன்)
புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியரை கொடூரமாக கொன்றொழித்த அந்த கரிநாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள். இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட கபட ஒப்பந்தத்தூடாக கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் தங்களுடன் ஒன்றாக உண்டு , உறங்கி , உறவாடிய சகதோழர்-தோழியரின் உடல்களின் மீதேறிநின்று விடுதலைப் போராட்டத்திற்கு கிழக்கின் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களுக்கு நன்றிக்கடன் செலுத்திய நாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள்.
அன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா?
(பீமன்)
புலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதிவொன்றை இட்டிருந்தார். அந்தப்பதிவில் கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் எமது பெண்களை ‘கதறக் கதற கற்பழித்திருந்தனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.