(Maniam Shanmugam)
கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1956இல் தெரிவான தோழர் பொன்.கந்தையா அன்றைய இலங்கை அரசு கொண்டு வந்த ‘தனிச் சிங்கள’ சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை எனது முன்னைய பதிவில் பிரசுரித்திருந்தேன். அதைப் பலரும் வரவேற்றுப் பாரட்டியிருந்ததோடு பங்கிட்டும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
Month: May 2020
வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக-கேரள எல்லைகளில் வேளாண் களப்பணியாளர்கள் கண்காணிப்பு
தமிழக விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லையென்ற போதிலும், அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வெட்டுக் கிளிகள் தென்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இப்பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற புத்தகத்தில் இருந்து……
கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள்
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு அனுதாபமும், அஞ்சலியும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும், அமைச்சராகவும் பதவிவகித்த அமரர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக செயற்பட்ட ஒருவர். அவரது திடீர் மறைவையிட்டு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் –அத்தியாயம் 4
தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான் களமிறக்கம்
தொண்டமானின் இழப்பு
(சாகரன்)
மலையக மக்களைப் பற்றி பேச வேண்டின் அது தொண்டமானைத் தவிர்த்து பேசமுடியாது. மலையக மக்களின் தொழிற் சங்க தலைவர்களாவும், தேர்தல் வெற்றி பிரதிநிதிகளாகவும், மந்திரிசபை பிரதிநிதிகளாகவும் அடையாளம் காணப்பட்டவர்கள். தொழிற்சங்கம் ஒனறின் தலமைப் பொறுப்பை சாந்தா ஒன்றின் மூலம் கட்டிற்குள் வைத்திருந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள்.
வீடு என்பது வெறும் இடம் மட்டுமல்ல!- ஓவியர் மருது பேட்டி
வீடு திரும்புதல் எனும் நிகழ்ச்சியும், வீடு திரும்புதல் என்பதன் பொருளும் புராதன காலத்திலிருந்து எல்லாப் பண்பாடுகளிலும் மதிப்போடு பார்க்கப்படுகிறது. தேசத்தின் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு காலாட்படையினராகச் செயல்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஆசுவாசத்துடன் ஊர் திரும்பும் கௌரவத்தைக்கூட இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் அளிக்கத் தவறிவிட்டோம்.
கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’
(காரை துர்க்கா)
கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ”ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது” எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது.