அஞ்சலி: ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்- ஆகாயத்தின் மறுபக்கம் இரண்டு கண்கள்!

(ஆர்.சி.ஜெயந்தன்)

சினிமாவைக் காட்சியின் கலையாக முன்னிறுத்தும் கலைச் சமூகம் ஒளிப்பதிவாளர்களுடையது. எல்லீஸ் ஆர்.டங்கன் காலம் தொடங்கி தமிழ் சினிமா தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், எல்லா ஒளிப்பதிவாளர்களும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை.

கடலிலிருந்து எடுத்ததைக் கடல் எடுக்கும்

(எம்.இஸட். ஷாஜஹான்)

நீர்கொழும்பு நகரம், மீன் பிடித்துறைக்குப் பெயர் பெற்ற நகரமாகும். நகருக்கு அழகு சேர்க்கும் வகையில், கடலும் களப்பும் அமைந்துள்ளன. இதன் காரணமாக, நகரின் இயற்கைமிகு காட்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.

கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்: ஒரு இயக்கத்தின் வரலாறு

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டி ருக்கிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரர் தனது முழங்காலால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மேலே 8 நிமிடம் 46 நொடிகளுக்கு நின்றது அவரது உயிரைப் பறித்திருக்கிறது. இதனால், ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter – BLM) என்ற இயக்கம் மறுபடியும் தெருவில் இறங்கியும் சமூக வலைதளங்களிலும் போராட ஆரம்பித்திருக்கிறது. இனவெறியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2013-ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் முழு வீச்சில் செயல்பட்ட பிறகு தொய்வுகொண்டது.

அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்ல மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல.

தமிழ் மக்கள் யார் பக்கம்?

(ஏகலைவன்)

விடுதலை பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிவந்த தமிழ்த் தலைவர்கள் யாவரும், இப்போது அமெரிக்காவில் இடம்பெற்ற கொலையை அடுத்து, இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, வாய் திறக்கவில்லை. பல சமயங்களில், மௌனம் சொல்கின்ற செய்தி வலுவானது.

’இயற்கை சமநிலையை ஏற்படுத்த வேண்டும்’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இயற்கை சமநிலையை ஏற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர். க. மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (09) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறையில் வீட்டுத்தோட்டம் மும்முரம்

அம்பாறை மாவட்டத்தில், சுமார் 26,500 சௌபாக்கிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

அன்று பலாப் பழம்; இன்று அன்னாசிப் பழம்- தொடரும் யானைகளின் துயரம்

(கா.சு.வேலாயுதன்)

கேரளத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடியால் கர்ப்பிணி யானை காயமடைந்து உயிரிழந்த சம்பவம், மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. வெடி அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்டதா அல்லது தேங்காயில் வைக்கப்பட்டதா; யானைக்காக வைக்கப்பட்டதா அல்லது காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டதா எனும் விவாதம் தொடங்கி, ‘மதவாத’ அரசியல் வரை பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

மீண்டும் கொரனாவிற்குள்…. உலகத்தின் இரண்டாவது சனத்தொகை நாடு இந்தியா

(சாகரன்)
டிசம்பர் நடுப்பகுதியில் சீனாவின் வூஹானில் முதலில் அறியப்பட்ட கொரனா வைரஸ் இது ஒரு சீன வைரஸ்… சீனா(மட்டும்)வைத் தாக்கும் சீனப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் செல்லும் இனி சீனாவின் கதி அதோ கதிதான் என்று சீனா மீதும் அந்த நாட்டு மக்கள் என்று அடையாளப்படுதப்பட்ட மக்கள், அவர்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் என்று பலவற்றிலும் ஒரு வகை வெறுப்புணர்வுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த தொற்று நோய் பேரிடர் பற்றிய தொடக்கம்.