கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி
Month: July 2020
வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை…கந்தன் கருணை புலிகளின் சிறைச்சாலைப் படுகொலை….
(Sutharsan Saravanamuthu)
வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள், 23 ஜூலை எப்படி மறக்க முடியாததோ அப்படியே 30 மார்க்சும் மறக்கமுடியாததே.
23 07 1983 வெலிக்கடைச் சிறைக் கொலை
புத்தருக்கு இரத்த அபிஷேகம் சிங்களவனுகளால் செய்யப்பட்டது.
30 03 1987 கந்தன் கருணைக் கொலை
கந்தனுக்கு இரத்த அபிஷேகம் புலிகளால் செய்யப்பட்டது.
கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதற்கு பின்னர் இன்று தான் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
நடிப்பில் ஸ்டைல்… ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் நினைவுநாள்
(வி. ராம்ஜி)
சினிமாவை, சி.பி., என்றும் சி.மு., என்றும்தான் ஒரு கோடு கிழித்துப் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கும். நாயகன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார். இயக்குநர் திட்டமிட்டபடி கதை நகரும். ஆனால் ‘நடிக்கிறது இவருப்பா. அதுக்குத் தகுந்தது போல தைரியமா எத்தனை பக்கம் வேணும்னாலும் வசனம் எழுதலாம்’ என்றார்கள். ‘அவர் நடிக்கிறார்னா, அந்த சீன்ல, டைட் க்ளோஸப்பை தாராளமாவும் தைரியமாவும் வைக்கலாம்’, ‘வெறும் சோளப்பொரி போடாம, அந்த நடிப்பு யானைக்குத் தகுந்தபடி நடிக்கறதுக்கு தீனியைப் போட்டாத்தான், படமே பிரமாண்டமாகும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அப்படியொரு நடிப்பு அசுரன்… சிவாஜி கணேசன். அதனால்தான், ‘சி.பி., சிவாஜிக்குப் பின், சி.மு., சிவாஜிக்கு முன்’ என்று பகுத்துப் பிரித்து, பிரித்துப் பகுத்து சினிமாவைப் பார்த்தார்கள்.
தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது?
(என்.கே. அஷோக்பரன்)
வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக் கூட்டாகத் தேர்ந்தெடுக்கும்போது, சுதந்திரமான தேர்வின் மூலம், நாம் நம்மை ஆளுகிறோம் என்ற கருத்தை அது உறுதிப்படுத்துகிறது.
மயிலிட்டி மீன்பிடி இறங்குதுறைக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு
மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை, இன்று (20) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்ததுக்கும் இடையிலேயே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
’கடவுளால் மட்டும்தான் கர்நாடக மாநிலத்தை கொரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும்’
’உள்நாட்டு இறப்பர் உற்பத்தி மேம்படுத்தப்படும்’
நல்லூர் திருவிழா குறித்து பிரதமரின் அதிரடி தீர்மானம்
தேர்தல் விஞ்ஞாபனங்கள் எங்கே?
தேர்தல்கள் நெருங்கிவிட்டன. ஆனால் பிரதான தமிழ்க் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை இன்னும் காணவில்லை. இந்தப் பத்தி எழுதப்படும் கணம் வரை குறிப்பாக வடக்கில் மையங்கொண்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் எவையும் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடவில்லை. இது மிக முக்கியமாக வினாவொன்றை எழுப்புகின்றது. இது இன்றைய காலப்பகுதியில் கட்டாயம் பேசப்பட வேண்டியது.