(Kanniappan Elangovan)
தமிழர் தரப்பில் அரசியல் என்ன என்பதை அறியத் தேடினால் கதிரையைக் களவாடிவிட்டனர் என்கிற கதைதான் கேட்குது. அரசியல், உரிமை, கோரிக்கை, தீர்வு என எதையும் கேட்க இயலாமல் உள்ளது..
The Formula
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள், நெருக்கடிகளை உருமறைப்புச் செய்து, மக்களின் கவனத்தைக் கச்சிதமாகத் திசைதிருப்பி இருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றாக, இலங்கையர்களைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் தயாராக இருக்கிறோமா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு களனி ரஜமஹா விகாரையில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.
முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.
பொதுத் தேர்தலில் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.