(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
The Formula
சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,091 ஆக அதிகரித்துள்ளதென, சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் 183 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் பதிவாகியுள்ளனரென, சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .
(சுகன்)
போர்க்களத்தைத்தவிர வேறெதற்கும் இந்த நஞ்சுச் செடி நினைவுகூரப்படுவதில்லை. போரிற்குச் செல்லுமுன் செங்காந்தள் மாலையை அணிந்து செல்வதாய ஒரு சித்திரம் புறநானூறில் உண்டு.பெண்களின் கைவிரல்களுக்கு அழகின் உவமானமாகக் கொள்வது இப்பூவின் உருவம்.
கௌரவர்களுடன் யுத்தம் என முடிவெடுத்தபின் திரோபதி இந்த மலரைத் தலையிற் சூடி அதை உறுதிப்படுத்தினாரென பாரத உபகதை உண்டு.Gloriosa superba என தாவர வகைப்பாட்டில் அடையாளப்படுத்தப்படும் இச்செடியருகே பாம்புகள் படுத்திருக்குமெனவும் பார்த்தால் கண்வருத்தம் வருமெனவும் வேலியோரங்களில் தானே வளரும் இதை வெட்டி அழித்துவிடுவார்கள்.
இதைக் குறியீடாகக் கொள்ளும் இனக்குழுக்கள் அழிந்துபோவர்கள் என ஐதீகம்.அழகைக் காட்டினாலும் ஆரும் இம்மலரை அண்டுவதில்லை.தமிழ்நாட்டுத் தமிழுணர்வாளர் ஒருவர் பிரபாகரனுக்குப் பரிந்துரை செய்தது இது.
தமிழ்நாட்டினதும் சிம்பாப்வேயினதும் தேசிய மலரிது. துக்கத்தின் குறியீடாகக்கூடக் கொள்ளப்படாத இப்பூவையும் செடியையும் ஆடு- மாடு மற்றும் தாவர பட்சணிகள் எதுவும் உணவாகக் கொள்வதில்லை.
பூவே செம்பூவே ..என பாடும் பாடல்களிலும் இதற்கு இடமில்லை,வாசமில்லா மலரிது…மல்லிகைப்பூவே ..மல்லிகைப்பூவே பார்த்தாயா..செந்தூரப்பூவே ..செந்தூரப்பூவே..முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே..தாமரை பூத்த தடாகமடி…இப்படியாக வாழ்வோடிணைந்துவரும் பூக்களின் வழியிலும் இதற்கு இடமில்லை.கோவில்களின் சிற்பங்களிலும் இல்லை.பூசைக்கேற்ற பூவிது..எனக் கொண்டோருமில்லை.தண்மையும் குளிர்மையுமற்ற இப்பூ நெருப்பின் தீச்சுவாலை வடிவமாக அனல் மேலெழும் உற்பவமாகப் பார்க்கப்படுவதுமுண்டு “கார்த்திகைப்பூக் காதலர்கள் ” ஆழ்ந்த இரக்கத்திற்குரியவர்கள்.
(George RC)
கார்த்திகை மாதம் வந்தால்பூ படம் போட்டுஓவரா சீன் போடும்கார்த்திகைப் பூ காதலர்களே!நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுநீங்கள் வைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒப்பாரிகளையும்நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீர்,ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கண்ணீர் எல்லாவற்றையும்பார்த்தால்…உண்மையில் தங்கள் பிள்ளைகளை, தந்தையரை, துணைவரை போராளிகளாக இழந்தவர்கள் கூடஇப்படி கூத்துக் காட்ட மாட்டார்கள்.அவர்கள் மெளனமாக அழுது விட்டுப் போவார்கள்.”’
கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும். அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.