கேகாலை மாவட்டத்தில், இதுவரை 1,007 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 4,583 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், தெஹியோவிட்டயில் மாத்திரம் 326 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
Month: December 2020
ஐந்து நாட்களுக்கு காத்தான்குடி முடக்கம்
கொழும்பு, கம்பஹாவில் பரவும் கொரோனா
காவாலிகளின் கைகளில் தமிழ்த் தேசியம்
மத்திய மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா
மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1740 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் இதுவரை 1076 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 538 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 354 பேருக்கு தொற்று உறுதியானது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் இன்று(30) இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 38,697ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 42 417 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7599 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 34 623 பேர் குணமடைந்துள்ளனர்.
சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை
21 வயது மாணவி மேயராக பதவியேற்பு
திருவனந்தபுரம் மாநகர மேயராக 21 வயதான, பிஎஸ்சி கணிதவியல் மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுசாரி கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் வென்றன. மற்றவர்கள் 5 இடங்களில் வென்றனர்.