கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் தனது கிராமத்தில் 16 குளங்க ள் அமைத்து அந்தப் பகுதியை பசுமை ஆக்கி உள்ளார். கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுகாவில் அமைந்துள்ள தாசணடோடி என்னும் கிராமம் குந்தினிபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இந்த இடம் வெறும் பாறைகளாக இருந்தது. மேலும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்வதே அபூர்வமாகவும் அப்படியே மழை பெய்தாலும் அது உடனடியாக வரண்டு விடுவதுமாக இருந்தது.
Month: December 2020
திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன் – சரத் பொன்சேகா
புரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்
புரெவி புயல் காரணமாக நாட்டில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் காயமடைந்துள்ளனர் எனவும் அரத்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 192 வீடுகள் பகுதியளவில் தேமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம்.
இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் போராட்டம்!
(Maniam Shanmugam)
இந்தியாவில் நரேந்திர மோடியின் இந்துத்துவ பாசிச அரசு விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள மூன்று மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலைநகர் டில்லியில் கூடி போராடி வருகிறார்கள்.
ஆனால் இந்தப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.
கொழும்பு வாழ்க்கையும் கொரோனாவும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
கொவிட்-19 நோயின் காரணமாக, பெரும் நெருக்கடியை நாடு, எதிர்நோக்கி இருக்கிறது. கொரோனோ வைரஸ் தொற்று, ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தாலும் அம் மாவட்டத்தின் நிலையை விட, கொழும்பு மாவட்டத்தின் நிலைமை, அதிலும் கொழும்பு மாநகரத்தின் நிலைமை, மிகவும் மோசமாக இருக்கிறது.
அமரர் வி.கே.வெள்ளையனின் நினைவுதினம்…
’தமிழர்களுக்கு படுகொலைகள் புதிதல்ல’
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறைச்சாலை படுகொலைகள் புதியவையல்ல என்றார். இன்று (2) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 350 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திவுலுபிட்டிய – பேலியகொடை கொரோனா கொத்தணிகளின் தொற்றாளர் எண்ணிக்கை 21333 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24882 ஆக உயர்ந்துள்ளது.
‘புரெவி புயல்’எங்கு நிற்கிறது தெரியுமா?
‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியிருந்தது. எனினும், ‘புரெவி’ புயல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் திருகோமலைக்கு கிழக்கு-தென்கிழகில் 140 கிலோமீற்றில் நிலைகொண்டுள்ளது என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆகையால், பிற்பகல் 11.30 மணியளவிலேயே அவ்விடத்தில் நிலைகொண்டிருந்தது என அந்நிலையம் அறிவித்துள்ளது.