(பதிவாளர்-எழுத்தாளர் இரா.முருகவேள் கோவ)
சென்னை தீவுத்திடலில் இருந்து மட்டுமல்ல பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான குடிசை பகுதிகளில் இருந்து மக்கள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.
The Formula
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு வெளியிட்டுள்ளது.
(கணேஸ்)
இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு , சாக்கடல் மற்றும் யாழ் குடாநாடும் நீர் முகாமைத்துவமும் இயற்கையின் விதிகளை மனிதர் மாற்ற முயலும் போது என்ன விபரீதங்கள் நடக்கலாம் என்பதற்கு இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஒரு உதாரணம். சாக்கடலுக்கு ஜோர்டான் நதி நீரை கொண்டுவரும் அதேவேளை அந்த பாலைவன காலநிலை பெருமளவான நீரை ஆவியாக்குவதால் பல மில்லியன் வருடங்களாக அதன் சமநிலையை பேண உதவிசெய்தது.
கடந்த அரை நூற்றாண்டுகளாக சிரியா , ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஜோர்டான் நதியின் நீரை ஏறக்குறைய முழுவதும் எடுத்து விடுவதால் சாக்கடலின் நீர் மட்டம் 30 வருடத்தில் 30 மீட்டர் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடலின் இருபுறமும் sinkholes தோன்றி பல ரிசோர்ட் டுகளையும் , விவசாய நிலங்களையும் இல்லாமல் செய்து விட்டது.
இப்பொழுது இதை சரி செய்வது எப்படி என்று தலையை போட்டு உடைக்கிறார்கள்இதே போன்று யாழ் குடாநாட்டில் நிலாவரை போன்ற சில இடங்களில் sinkholes அவதானிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நாங்கள் உறிஞ்சுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இவை இரண்டுமே பிழையான நீர் முகாமைத்துவத்தால் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.
ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் வாக்களிப்பு முடிவுகளை நிராகரிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தைக் கேட்பதன் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியை மாற்றுவதை எதிர்பார்க்கும் டெக்ஸாஸின் வழக்குக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், 17 ஐ அமெரிக்க மாநிலங்களும் தமது ஆதரவை நேற்று வழங்கியுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று (10) நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.