(வேதநாயகம் தபேந்திரன்)
இலங்கைத் தீவை ஆட்டிப் படைத்து வாழ்வின் அனைத்துத் தளங்களையும் அசைத்து விட்ட மூன்று தசாப்த காலப்போர் முடிந்து விட்டது. முற்றுப்பெற்று விட்டபோர் சில சொற்களையும் மரபுகளையும் கற்றுத்தந்துவிட்டே போயுள்ளது.
Month: January 2021
பெரும்பான்மை இனத்தின் பாதுகாப்பின்மை உணர்வு
(என்.கே. அஷோக்பரன்)
இலங்கையின் புகழ்பூத்த வரலாற்றியல் ஆய்வாளர்களில் ஒருவர் கே.எம். டி சில்வா. 1998ஆம் ஆண்டு பிரசுரமான, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலொன்றில், ‘இலங்கையின் இனப்பிரச்சினையானது, சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மைக்கும், பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மைக்கும் இடையிலான மோதல் என்று விளிக்கிறார். இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
மீள இயங்கவுள்ள ரயில் சேவைகள்
கொவிட் 19 பரவலையடுத்து தற்காலிகாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை, நாளை (12) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 36 ரயில் சேவைகள் நாளை முதல் மீள சேவையில் ஈடுபடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
யாழ். பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் சற்றுமுன் நாட்டப்பட்டது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு சம்மதித்தனர். உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை இன்று (11) அதிகாலை 3 மணியளவில் சந்தித்த சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.
மலையக தியாககிகள் தினம் அனுஷ்டிப்பு
நினைவுத்தூபி விவகாரம்: ’துணைவேந்தரிடம் ஆதாரம் உள்ளது’
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு
தமிழரசுக் கட்சி இடறிய இடத்தில் வெற்றிபெற்ற மணிவண்ணன்
கொவிட்-19 கதையாடல்-5: சடலங்களில் அரசியல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
பெருந்தொற்று எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாலும் இலங்கையில் அதைவிடப் பெரிய பிரச்சினை, இறந்தவர்களைத் தகனம் செய்வதா, அடக்கம் செய்வதா பற்றியது. கொவிட்-19 முழு உலகுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மட்டும் இந்தப் பெருந்தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில், பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், சடலங்களை வைத்துச் செய்யப்படும் அரசியல் நீண்டது. அது பாரிய அழிவுகளையும் இனப்பகையையும் உருவாக்கியிருக்கிறது.
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, மரணித்தோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. இதற்கான அறிவியல் காரணங்களுக்கு அப்பால், அரசியல் காரணங்களே பிரதானமானவை.