அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும். நேற்று, பைடனின் வெற்றி உறுதிசெய்யப்படுவதை எதிர்த்து, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அது கலகமாக உருவெடுத்தது. பின்னர் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
Month: January 2021
மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன
கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று(06) அதிகாலை 05 மணிமுதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கண்டி − பூஜாபிட்டிய பகுதியிலுள்ள பமுனுகம மற்றும் தினவத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரத்தினபுரி − எஹலியகொட பொலிஸ் பிரிவின் மொலகல்ல பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாளை
டில்லியில் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 40நாள்களைக் கடந்து கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
வெளிநாட்டு விடுமுறைகளால் பணிகளை இழக்கும் அரசியல்வாதிகள்
வெறிச்சோடிக் காணப்படும் ஓட்டமாவடி
கொரோனா தாக்கம் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசம் இன்று (6) வெறிச்சோடிக் காணப்பட்டது. குறித்த பகுதியில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகளின் படி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
’தமிழர்களைப் பற்றி சிந்திப்பது இலங்கைக்கு நல்லது’
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில், அமைச்சர் திணேஸ் குணவர்தனவுடனான இன்றைய சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தென் கொரியக் கப்பலைக் கைப்பற்றிய ஈரான்
3772 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்
இலங்கை: கொரனா செய்திகள்
வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது…..
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.