இலங்கை: கொரனா செய்திகள்

பேலியகொடை புதிய மரக்கறி மொத்த சந்தையில், ஆறு வர்த்தகர்களுக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. இதேவேளை, கம்பஹாவில் இருந்து வருகைதந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

வீதிகளில் குப்பை; மார்கழி கோலமிட்டுத் தடுப்பு

சென்னையில் வீதிகளில் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில், மார்கழி கோலமிட்டுத் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டம்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மூன்றாம் காலாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா இன்று வெளியேறியது. அந்தவகையில், இரண்டுக்குமிடையிலான 48 ஆண்டு கால இணைப்பு முடிவுக்கு வந்திருந்தது.

சீனா சினோபார்முக்கு முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்து அனுமதி

சீன அரச ஆதரவிலான பாரிய மருந்துற்பத்தி நிறுவனமான சினோபார்மின் பிரிவொன்றால் உருவாக்கப்பட்ட கொவிட்-19 தடுபுமருந்தொன்றுக்கு சீனா இன்று அனுமதியளித்துள்ளது. குறித்த தடுப்புமருந்தின் தொழிற்படு திறனானது பொதுவெளியில் வெளியிடப்பட்டிருக்காதபோதும், இடைக்காலத் தரவின் அடிப்படையில் கொவிட்-19-ஐ கொண்டிருப்பதை குறித்த தடுப்புமருந்தானது 79.34 சதவீதம் தடுப்பதாக இதன் உற்பத்தியாளர் நேற்று தெரிவித்திருந்தது. இந்த தடுப்புமருந்தை இம்மாதம் முதலில் ஐ. அரபு அமீரகம் அனுப்பியிருந்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 கதையாடல்-4: தடுப்பூசி என்ற மந்திரச் சொல்

(இந்த கட்டுரையில் கொரனா தடுப்பு மருந்தை பாவிப்பது உகந்தது அல்ல என்ற எண்ண ஓட்டம் ஆதிகம் செலுத்துவதாக மருத்துவத் துறைசார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர் அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு எனவே இந்தக் கட்டுரையை அதன் அடிப்படையில் ஆய்வுக்கு உள்படுத்தி வாசிக்கவும் – ஆர்)

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எப்போதும் எதிர்பார்ப்புகளோடுதான் வருடங்கள் தொடங்குகின்றன. ஆனால், இம்முறை எதிர்பார்ப்பு என்பது, இந்தப் ‘பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதை, அடிநாதமாகக் கொண்டிருப்பது வியப்பல்ல.

நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.

(கவிதன் வரதன்)
·
தமிழ்படத்தில் ஏழைகளுக்கு உதவும் ஹீரோவாக நடித்து விட்டால் போதும், நேராக தமிழக முதல்வராக ஆகிவிடலாம் என கனவு காணும் தமிழ்பட ஹீரோக்களுக்கு (சூப்பர் ஸ்டார்,உலக நாயகன்,கேப்டன்) மத்தியில் நிஜமான ஹீரோ.
“தற்கொலைக்கு முன் என்னை
ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…! “

பணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்! உடன்பிறப்புகள் கொந்தளிப்பு!


கடந்த சில நாட்களாக அதிமுக அரசின் சாதனைகள் விளம்பரங்கள் தொடர்ச்சியாக சன் தொலைகாட்சியில் வந்து கொண்டிருக்கின்றது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையுமேற்படுத்தியுள்ளது!

வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கு சரிகிறதா?

வங்கத்தின் 294 தொகுதிகளிலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவு வாக்காளர்களின் உளவியல் பற்றி ஒரு சுவாரசியமான அம்சத்தை வெளிப்படுத்தியது. யாருக்கு வாக்களிப்பீர்கள் என்றும், யார் வெல்வார்கள் என்றும் கேட்கப்பட்ட கேள்விக்குச் சிலரே வெளிப்படையாகப் பதிலளித்தார்கள்.

கனடா வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்

கனடா வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், “கனடா வரும் வெளிநாட்டினர் 72 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது