‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’

பெருந்தோட்ட மக்களுக்கு இடவசதிகளை கொண்ட வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, இந்திய அரசாங்கமும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளது என்றார்.

’தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்’

வவுனியா – தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியலாளர் ச,கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பீ .1.258 பரம்பரையின் மாறி இலங்கையில் உள்ளது

பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளில் பரவிய மாறி (திரிபடைந்த) கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன உறுதியாக தெரிவித்துள்ளார். கொவிட் -19 (பீ .1.258 பரம்பரை) இன் புதிய மாறுபாடு, அதிக பரிமாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் புதன்கிழமை மாபெரும் போராட்டம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து, எதிர்வரும் புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி – கஜேந்திரகுமார்

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இந்தியாவில் விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்த அவர், இன்று கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக, யாழ்ப்பாணம் நகரில், நேற்று (25) காலை, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

‘கொழும்பு நிலவரம் வழமைக்கு மாறானது’

கொரோனா வைரஸின் நேற்றைய (24) நிலவரப்படி, கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு, வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முகுந்தன் (முருகநேசன்) தோழர் பற்றிய நினைவுக் குறிப்பு:


எமது விடுதலைப் போராட்டத்தில் விளைந்த உன்னதமான இலட்சிய புருஷர்கள் வரிசையில் வரலாற்றால் கண்டுகொள்ளப்படாது போய்விட்ட சிலரில் முகுந்தன் தோழர் என்று அழைக்கப்படும் முருகநேசன் அவர்களும் ஒருவர்.