நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்

பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்றாலும் வாழ்தல் நாம் வகுத்துக்கொள்ளும் வழிமுறையில் செல்கிறது. சுயநலம், உறவுகள் நலம், பொதுநலம் என்ற தெரிவும் எமதே. அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவராக ஆரம்பித்து உறவுகளின் கலப்பில் அவர் சார்ந்த நலம் பேணும் நிலைக்கு ஆட்பட்டு பின்பு சமூகப் பாதிப்பில் தான் பொதுநலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறோம். அதில் ஓரளவு எமது பங்களிப்பை செய்தாலும் சுயநலமும் உறவுகள் நலமும் முன்னிலைப்படுதல் யதார்த்தம்.

‘மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம்; அள்ளியும் முடிஞ்சுக்கலாம்’

அடுத்தவரைப் பார்த்து வாழநினைத்தால் இருப்பதையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துநிற்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும். இல்லையேல், கடன்காரர்களின் தொல்லைகளால் இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்படும். அவ்வாறான சம்பவங்கள், எமது நாட்டில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

கடும் பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்த மிகச் சரியான நாள்

இலங்கைத் திருநாட்டின் 73ஆவது சுதந்திர தினம், ‘வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு’ எனும் தொனிப்பொருளில் இன்று கொண்டாடப்படுகின்றது. பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன.

யாழ். பல்கலையிலும் கரிநாள் பிரகடனம்

தடைகளை மீறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நான், சிங்கள-பௌத்த தலைவன்’ – கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வியட்நாமில் அமெரிக்கா

(Maniam Shanmugam)

அமெரிக்கா தனது வல்லாதிக்க கொள்கைகளை எதிர்ப்பவர்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு “மனித உரிமை மீறல்” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் எல்லோரும் அறிந்த சங்கதி.

’ஐ.நா அறிக்கையை நிராகரிக்க இலங்கை தீர்மானம்’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

7ஆம் திகதி சென்னை வருகிறார் சசிகலா

கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை யிலிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். தற்போது பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

’பொத்துவில் முதல் பொலிகண்டிக்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்கவும்’

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.