(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.
The Formula
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
(மக்கள் அதிகாரம் – நெல்லை)
விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிம்லாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
சிம்லாவில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து சில்லறை விற்பனையாளர்கள் நேரடியாக ஆப்பிளை விலைக்கு வாங்கி அதை நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தனர். வியாபாரிகளுக்கு அங்கு சிறிய கிடங்குகள் மட்டுமே இருந்தன.
சில தமிழ் இனவாதிகள் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் செய்யவில்லை என்று அன்றும் இன்றும் கூறி வரலாற்றைத் திரித்து வருகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
உண்மையில் உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஸ்யாவில் லெனின் தலைமையில் அமைந்த முதல் சோசலிச அரசுதான் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு முதன்முதலாக சுயநிர்ணய உரிமை வழங்கியது. அதன் பின்னரே சுயநிர்ணயம் என்ற சொல் அகராதியில் இடம் பெற்றது என்றுகூடத் துணிந்து கூறலாம்.
இலங்கையில் 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க அரசு நாட்டின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டும் இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் ‘தனிச் சிங்கள’ சட்டத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன.
அப்பொழுது அந்தச் சட்ட மூலம் சம்பந்தமான விவாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன்.கந்தையா அவர்கள் நிகழ்த்திய உரையின் சில முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
இது கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒரு உதாரணம் மட்டுமே.“இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான எனது கருத்து நோக்கு நான் ஒரு தமிழனாக இருக்கிறேன் என்ற உண்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகிறேன்.
எனது கடந்த காலத்தினையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கிறது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும்.எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது.
எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியைப் பிரயோகிக்கக்கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக்கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கிறீர்கள்.
நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதில் பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதாரக் கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புத்தான் எமது கட்சி.
சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும் விரக்தியிலும் அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் பற்றிப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார, சமூக ரீதியான எல்லா மட்டங்களிலும் அவர்களது உரிமைகளுக்காக இது போராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக எமது கட்சி போராடுகின்றது.எமது அரசியற் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினரான நாங்கள் முழுப் பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம்.
இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பியோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி செய்யவும் இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். மற்றெந்த மொழிக் குழுக்களையும் விட, எந்த மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது.”
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.7.
ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.நில அளவீடுகள்*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீசெண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்நீட்டலளவை• 10 கோண் = 1 நுண்ணணு• 10 நுண்ணணு = 1 அணு• 8 அணு = 1 கதிர்த்துகள்• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு• 8 துசும்பு = 1 மயிர்நுனி• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு• 8 சிறு கடுகு = 1 எள்• 8 எள் = 1 நெல்• 8 நெல் = 1 விரல்• 12 விரல் = 1 சாண்• 2 சாண் = 1 முழம்• 4 முழம் = 1 பாகம்• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)• 4 காதம் = 1 யோசனை• வழியளவை• 8 தோரை(நெல்) = 1 விரல்• 12 விரல் = 1 சாண்• 2 சாண் = 1 முழம்• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்• 4 குரோசம் = 1 யோசனை• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)நிலவளவை குழிக்கணக்கு வருமாறு16 சாண் = 1 கோல்18 கோல் = 1 குழி100 குழி = 1 மா240 குழி = 1 பாடகம்கன்வெர்ஷன்1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்பிற அலகுகள்1ஏர் = 100 சதுர மீட்டர்1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்நில அளவை 100 ச.மீ – 1 ஏர்ஸ்100 ஏர்ஸ் – 1 ஹெக்டேர் 1 ச.மீ – 10 .764 ச அடி2400 ச.அடி – 1 மனை 24 மனை – 1 காணி1 காணி – 1 .32 ஏக்கர் 144 ச.அங்குலம் – 1 சதுர அடி 435 . 6 சதுர அடி – 1 சென்ட் 1000 ச லிங்க்ஸ் – 1 சென்ட் 100 சென்ட் – 1 ஏக்கர் 1லட்சம்ச.லிங்க்ஸ் – 1 ஏக்கர் 2 .47 ஏக்கர் – 1 ஹெக்டேர்1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)100 சென்ட் = 4840 சதுர குழிகள் 1 சென்ட் = 48.4 சதுர குழிகள்1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )1 ஏக்கர் = 43560 சதுர அடி
கொவிட்-19-இன் ஆரம்பங்கள் தொடர்பாக விசாரணை செய்கின்ற உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையிலான நிபுணர்கள் அணியொன்று, ஆரம்பத்தில் கொவிட்-19 கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுஹானிலுள்ள தற்போது மூடப்பட்டுள்ள மொத்த கடலுணவுச் சந்தைக்கு விஜயம் செய்துள்ளது.