வெளிநாடுகளில் இருந்து திருப்பியனுப்பட்ட 24 பேர்

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர். குடிவரவு – குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாடுகளில் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு

(என்.கே. அஷோக்பரன்)

மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது.

நுண்நிதி கடனை நிறுத்த கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

நுண்நிதி கடனை நிறுத்த கோரி, முல்லைத்தீவில், இன்று (30) வெவ்வேறு அமைப்பினரின் ஏற்படும், 2 கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நுண்கடன் திட்டத்துக்கு எதிராக கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு

நுண்கடன் திட்டத்தை இல்லாமல் செய்து, பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து, மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை, இன்று (30) முன்னெடுத்தன.

தீவுப்பகுதியை வளமாக்கும் கண்டல் காடுகள் – ஒரு கடற்படை அதிகாரியின் விடா முயற்சி

கரையோரப் பகுதிகளை ஆழிப் பேரலை போன்ற பேரழிவுகளிலிருந்து காத்தல், மண்ணரிப்பைத் தடுத்தல் முதல் அருகே வாழும் மனிதருக்குத் தேவையான கடலுணவு மற்றும் எரிபொருட் தேவைகளை வழங்கிவரும் இயற்கையின் கொடையான கண்டல் தாவரங்கள்கடந்த காலங்களில் இலங்கையில் பேரழிவுக்குட்பட்டு வந்தன. போர்க்காலத்தில் பெரும்பாலானவர்கள் தமது விறகுத் தேவைக்கு இத் தாவரங்களையே பெரிதும் பயன்படுத்தினார்கள்.

கந்தன் கருணை படுகொலை

(சாகரன்)

வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை இலங்கை அரசாங்கத்தின் மிக மோசமான செயற்பாட்டை காட்டி நிற்கும் கொலை. இலங்கை பேரினவாத அரசாங்கத்தின் தனது நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தின் மீதான மனித உரிமை மீறல்களின் உச்சத்தை குறியீட்டு ரீதியில் உலகிற்கு எடுத்துக் காட்டிய வரலாற்று நிகழ்வு. இது 1983 ஜுலை 25, 28 இரு தினங்களாக நடைபெற்றன.

யாழுக்குப் பூட்டு; மேல் மாகாணத்துக்கு திறப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நீர்வை பொன்னையன் குறித்த மனப்பதிவு….

(ந. இரவீந்திரன்)

நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது.

குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் காலந்தாழ்த்திய ஐ.நா ஞானமும்

இன்றைக்கு 38ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் கறைபடிந்த வரலாற்று நிகழ்வுகளும் பலருக்கும் இன்னும் ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான், ‘கறுப்பு ஜூலை’ என அடையாளப்படுத்தப்பட்டது.

ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகம் கொடுப்போம் -ராஜபக்ஸ

ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.