
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள செனாப் ஆற்றுக்கு மேலாக நிர்மாணிக்கும் பாலம், உலகிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகின்றது. இந்தியாவின் புகையிரத திணைக்களத்தால் நிர்மாணிக்கப்படும் இப் பாலமானது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் நிகழ்வாக அமைந்துள்ள அந்தப் பாலத்தின் வளைவுப் பகுதி நிறைவடைந்துள்ளது.