தீவிரவாதம் பற்றிய வர்த்தமானி எழுப்பும் கேள்விகள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பொது இடங்களில் பேசுவோரும் எழுத்தாளர்களும், இப்போது முன்னரை விட பன்மடங்கு கவனமாகப் பேசவும் எழுதவும் வேண்டியுள்ளது. ஏனெனில், கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்ட விசேட வர்த்தமானியின் கீழ், தீவிரவாதத்தையும் வன்முறையையும் இனங்களுக்கு இடையிலான கசப்புணர்வையும் பரப்புவோர் எனச் சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்றி மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

தான்சானிய ஜனாதிபதி கொவிட் தொற்றால் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுபலி உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய அவர் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்து துணை ஜனாதிபதி சமியா சுலுஹ ஹாசன் அறிவித்துள்ளார்.

டக்ளஸை சந்திக்க விருப்பம் இல்லை

ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில், அவரை ஒருபோதும் தாம் சந்திக்கப் போவதில்லையெனத் தெரிவித்த வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி, அவரை சந்திக்க விருப்பம் இல்லையெனவும் கூறினார்.

அம்பிகை

(Arun Ambalavanar)

அம்பிகை ஒரு களவாணிக் குடும்பத்தில் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த மோசடிக்காரி. அம்பிகையின் அப்பன் நாகேந்திரம் சீவரட்ணம் 1987 க்கு முதல் பப்புவா நியூகினி நாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் சேர்த்தவர். ஒஸ்றேலியாவுக்கும் வந்து புலிகளுக்காக பணம் சேர்த்தவர். 1987ல் பப்புவா நியூகினி அரசு சீவரட்ணம் செய்த மோசடிக்காக அவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்தியது. புலிகளுக்காக சேர்த்த பணத்தோடு சென்னைக்குப்போன சீவரட்ணம் புலிகளின் குறித்த பணத்தை பாவித்து லண்டனுக்கு முதலீட்டாளர் விசா எடுத்து வந்தார். உசாரான புலிகள் அவரின் சகோதரரான நாகேந்திரம் கருணாநிதியை 1990ல் திருகோணமலையில் கடத்திவைத்து தமக்குச்சேரவேண்டிய முழுப்பணத்தையும் மீட்டனர்.

உண்ணாவிரதப்போராட்டங்கள்

(Ruban Mariarajan)

இன்று வடக்கு கிழக்கில் பல உண்ணாவிரதப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.தமிழரசு கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று இவ்வாண்டுடன் 60 வது ஆண்டு.சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி வீ.என்.நவரத்தினத்தை இத்தருணத்தில் மறக்கமுடியாது.1961 பெப்ரவரி 20 யாழ்.கச்சேரி முன்பாக அவர் பொலிசாரால் தாக்கப்பட்டது.அன்று அரசாங்க அதிபர் எம்.சிறிகாந்தா,யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ரிச்சார்ட் ஆர்ன்ட் ஆகியோருடன் பழைய பூங்காவில் இருந்து வந்த ஜீப்பை வாசலில் வழிமறித்து கண்டிவீதியில் சத்தியாக்கிரகம் இருந்த எம்.பிக்களான டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், அ.அமிர்தலிங்கம், வி.தர்மலிங்கம், க.துரைரத்தினம், வீ.என்.நவரத்தினம், வீ.ஏ.கந்தையா (ஊர்காவற்றுறை) ஆகியோரை பொலிசார் அடித்தும் இழுத்தும், சப்பாத்துக்கால்களால் உழக்கியும், மிதித்தும் கைகளை, கால்களை பிடித்து தூக்கி எறிந்த காட்சி.அவர்களுடன் தமிழரசு தொண்டர்களும் தாக்கப்பட்டனர்.ஆனால் இந்த தமிழரசு எம்.பிக்களே ஜீப்பின் முன்பும்,ரயர்களுக்கு தடையாகவும் துணிந்து இருந்தனர்.அன்று பொலிசார் மிக மோசமாக நடந்துகொண்டனர்.வீதியில் நின்ற பொதுமக்களையும் தாக்கினர்.

அனைத்து ஆவணங்களையும் யாழுக்கு கொண்டுவருமாறு உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார்.

பஸ்-ரயில் விபத்து: சந்தேகநபர்களுக்கு மறியல்

தலைமன்னார் – பியர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம் தனியார் பஸ், ரயில் மோதி ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக விஞ்ஞாபனங்கள் கவர்ந்திழுத்த இலங்கை

தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்பட்டிருக்கும் மிகமுக்கியமான இரண்டு அணிகளான, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) ஆகியன தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.

பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.