Month: April 2021
இலங்கை: கொரனா செய்திகள்
இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்
இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றின் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நிலவிவருகின்றது. குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன. இந் நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
மியான்மார் விமானத்தளங்கள் மீது றொக்கெட்டுகள் ஏவப்பட்டன
மியான்மாரின் இரண்டு விமானத் தளங்கள் மீது அடையாளந் தெரியாத தாக்குதலாளிகள் இன்று றொக்கெட்டுகளை ஏவியபோதும் எதுவித உயிரிழப்புகளும் ஏற்படாததோடு, சிறியளவிலான சேதமே ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் தாக்குதல்களை மியான்மார் இராணுவம் உறுதிப்படுத்தியிருந்தது.
இலங்கை: கொரனா செய்திகள்
பாலம் கல்யாணசுந்தரம்
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார். பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடர்ந்தும் வழங்கினை முன்னெடுத்து செல்லவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) வழங்கியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்: பொறியில் சிக்கிய அரசாங்கம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டு மக்கள் மனதில் கட்டி எழுப்பிய, “எமது பதவிக் காலத்தில், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வோம்” என்ற அபிப்பிராயம், முற்றாக ஒழிந்துவிட்டது. மாகாண சபைகளை இரத்துச் செய்வதைப் பற்றி, அரசாங்கத்தின் தலைவர்களில் எவரும் இப்போது பேசுவதில்லை. மாறாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதைப் பற்றியே, இப்போது கலந்தாலோசித்து வருகிறார்கள்.
இலங்கை: கொரனா செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கை: கொரனா செய்திகள்
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா” எதிர் வரும் நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல இடங்களை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அத்தியாவசியப் பொருட்களுடன் மக்கள் தயாராக இருப்பது நல்லது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.