கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாச்சிக்குடா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, முழங்காவில் மகா வித்தியாலயம் வரை சென்று சென்றடைந்த்து. பின்னர், பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
Month: April 2021
மார்ச் 31: இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய நாள்
இந்த நாள் இந்தியாவிற்க்கு முக்கியமான நாள் கூடுதலாக தமிழகத்துக்கு மிக முக்கியமான நாள் ..
ஆம்….இதே மார்ச் 31ல் 32 வருடங்களுக்கு முன்பு..
இந்திய அமைதிபடை இலங்கையிலிருந்து திரும்பிய நாள் இன்று.
அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.
இலங்கை: கொரனா செய்திகள்
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை இலங்கையர்களுக்கு ஏற்றுவதற்கான உரிய வயதினர் குறித்து சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குழு தீர்மானித்தன் பின்னரே, சினோபார்ம் தடுப்பூசி இலங்கையர்களுக்கு ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.