பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கதென்றும் சாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரான அமீர் அலி, யாரை திருப்திப்படுத்துவதற்கு ரிஷாட் கைதுசெய்யப்பட்டார் என வினவினார்.
Month: April 2021
இலங்கை: கொரனா செய்திகள்
செர்னோபில் அணு உலை விபத்து
(Suresh Turai Kanapathypillai)
( இந்த சம்பவம் நடந்த அதே சமயத்தில் அதிகாலை இரண்டு மணியளவில் அதே உக்ரைன் வான் பரப்பில், தரையில் நடக்கும் விபரீதம் தெரியாமல் விமானத்தில் பறந்து கொண்டு இருந்தேன்)
இன்றோடு சரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அந்தக் கொடும் விபத்து நடந்து. ஒரு பேரழிவிற்கு உலகம் சாட்சியாக இருந்த தினம் இன்று. ஒரு பேரழிவு இதன் மூலமாகவும் நிகழலாம் என்று உலகம் உணர்ந்த தினம் இன்று. செர்னோபில் அணு உலை விபத்து நடந்த தினம் இன்று.
நாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்
(Arunmozhi Varman)
கட்டுரையை வாசிக்கும் முன்னான சிறுகுறிப்பு :
2012ம் ஆண்டு மேமாதம் அளவில் நாம் தமிழர் கட்சியினர் தமது கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர். இவ் ஆவணத்தில் இருக்கின்ற கருத்திய ரீதியிலான முரண்கள் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தளங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் நடைபெறுகின்றன. அந்நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் / அமைப்பாளர் சீமான் மற்றும் அவர் அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவருக்கான ஆதரவான போக்கென்பது என்னுடன் இருந்தே வந்தது. அந்த அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மேற்குறிப்பிட்ட அந்த ஆவணத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டேன். அனுப்பி வைப்பதாக கூறினார்களே அன்றி ஒருபோதும் அனுப்பி வைக்கவில்லை. அதன்பின்னர் அதனை வேறு சில நண்பர்கள் ஊடாக பெற்றுக்கொண்டு மிக மிக அபத்தமான, ஆபத்தான அந்த ஆவணத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் பயனாக எழுதிய கட்டுரை இது.
மன்றத்தில் தூங்குவது யார்
‘பாலியில் நீர்மூழ்கி மூழ்கியது’
அதிகாரத்தின் உரையாடல்: ஆண்டகைக்கும் அழைப்பு வந்ததா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கடந்த வார அரசியற்களம் ‘தொலைபேசி அழைப்பு’களால் நிரம்பியிருந்தது. இங்கு இரண்டு நிகழ்வுகள் முக்கியமானவை. ஒன்று, கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில், விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி தெரிவித்த கருத்துகளை அடுத்து, ஜனாதிபதி, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கடுந்தொனியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேசிய கருத்துக்கு முற்றிலும் மாறாக, மறுநாள் கருத்து வெளியிட்டிருந்தார். அதிகாரத்தின் குரலின் வலிமையை, நாம் ஐயப்பட வேண்டியதில்லை. ஆனால், அதை விளங்குவதே இன்று நம்முன்னுள்ள சவால்.