பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Month: April 2021
விரிவுரையாளர் இன்பமோகன் பேராசிரியரானார்
தோழர் வே. ஆனைமுத்து தனது சிந்தனையை நிறுத்திக் கெண்டார்.
(சாகரன்)
ஈவேரா என்று அழைக்கப்படும் பெரியாரை அறிந்தவர்கள் தோழர் வே. ஆனைமுத்துவை அறியாமல் இருக்க முடியாது. பெரியாரின் மூச்சை… சிந்தனையை… பேச்சை… செயற்பாட்டை… பெரும்பாலும் முழுமையாக தொகுத்தவர் செயற்படுத்த முற்பட்டவர் அவற்றை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றவர் என்றால் அது தோழர் ஆனைமுத்துவையே சேரும்.
பெரியாரின் படைப்புகளைத் தொகுத்தவரும் பெரியாரிய – மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் ஏப்ரல் 06, 2021 தனது வயது முதிர்வின் காரணமாகவே நீண்ட காலமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்ததவர் தனது 96 வயதில் சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.
வே.ஆனைமுத்து: பெரியாரியப் பாதையில் பெரும் வாழ்வு
சிந்தனையாளர் பெரியாரைத் திராவிட இயக்கத்துக்குள்ளேயே எப்படிச் சிறைப்படுத்திவிட முடியாதோ அப்படி அவர் வழியில் தொடரும் பெரியாரியச் சிந்தனையாளர்களையும் அரைடஜன் அமைப்புகளுக்குள் அடைத்துவிட முடியாது. அறிவுச் சிறகை விரித்து அகண்ட வெளியில் அவரவர்க்கு எட்டிய உயரத்தில் பலரும் பறந்து திரிந்திருக்கிறார்கள். பெரியாரின் சிந்தனைகளைத் துறைவாரியாகத் தொகுத்து வெளியிடுவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவரும் சமூகநீதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான வே.ஆனைமுத்துவும் (1926-2021) அத்தகைய வரையறைக்குள் அடங்காத ஆளுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு
(என்.கே. அஷோக்பரன்)
(கடந்தவாரத் தொடர்ச்சி)
பல்கலைக்கழக கல்வியின் நோக்கமானது வெவ்வேறு நபர்களைப் பொறுத்தவரையில் வெவ்வேறானதாக அமையலாம். இன்றையச் சூழலில் பலரைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகக் கல்வி என்பது சிறந்த தொழில்வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான திறவுகோலாகக் கருதப்படுகிறது. இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே பெரும்பாலும் இந்தக் கனவுதான் திணிக்கப்பட்டு வருகிறது. எப்படியாவது உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறந்த புள்ளிகள் பெற்று, பல்கலைக்கழக அனுமதி பெற்றுவிட வேண்டும், பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டத்தைப் பெற்று நல்லதொரு தொழிலைப் பெற்றுவிட வேண்டும்.
குளங்களைத் தொலைக்கும் தலைமுறை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது.
யாழில் அதிரடி சட்டம்; ரூ.10,000 வரை தண்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் போதைப்பொருட்களை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி நிக்சன் அவுஸ்கோன் தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உருக்குலைந்துள்ள மாகாணசபை நிமிர்ந்திட உருப்படியான சிந்தனையும் செயல்களும் வேண்டும்
(அ. வரதராஜா பெருமாள்)
இந்தியாவும் ஜெனீவாவும் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகின்றன. இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் வல்லமையான ஒரு சிலர் மாகாணசபை அமைப்பு முறையை இல்லாதொழித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். இருந்தாலும் அரசாங்கம் அதனை செய்யமாட்டாது என்றே கருத முடிகிறது. – சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை சமாளிக்க மாகாண சபையை இப்போதுள்ள நிலையிலேயே வைத்துக் கொண்டு சமாளிப்பார்கள் என்றே அனுமானிக்க முடிகிறது.
தமிழ் நாட்டுத் தேர்தல்…
(சாகரன்)
மிகப் பெரிய ஆளுமைகள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பின்பு தமிழ் நாட்டில் யார் ஆட்செய்வது என்பதை தீர்மானிக்கும் சட்டசபையிற்கு நடைபெறும் தேர்தல் இது. இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இல்லாத நிலையிலும் இந்திய மத்திய அரசை தெரிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் அது மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கான தேர்தலாக இருந்தது. ஆதலால் இத்தேர்தல் அதிலிருந்து வேறுபடுகின்றது. அதனால் இந்த சட்டசபைத் தேர்தல் புதிய கவனத்தையும் பெறுகின்றது.