கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
Month: May 2021
தேவதாசி
விதிகளை ஏற்க கூகுள் ஆயத்தம்
இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களான ‘டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டர்கிராம்’ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய விதிகளை மத்திய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. ‘விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐந்தாவது இடத்தில் இந்தியா?
வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்று எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.3 சதவீதம் வளர்ச்சி காணும் என, எஸ்.பி.ஐ., அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
கொரோனா செய்தித் துளிகள்
பொகவந்தலாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்டப் பகுதிகளில், 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 51 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக உயர்வு. நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3481ஆக உயர்வு. நாவுல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி. தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 65) கொரோனாவால் மரணம்.
பொருள்களைக் காவியவர்களைத் தேடும் பொலிஸார்
கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ ஏற்பட்டு அது இரண்டாகப் பிளவுபட்டதால், அதிலிருந்து கடலில் விழுந்த கொள்கலன்களிலுள்ள வெவ்வேறு வகையான,இரசாயனப் பொருள்கள் கரையொதுங்குவதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண,விசேடமாக பமுனுகம,துங்கால்பிட்டிய, கொச்சிகடை, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரங்களில் மக்கள் ஒன்று கூடி இவ்வாறு மிதக்கும் பொருள்களை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.
பிராபாகரன் என்ற புலி
(Sridhar Subramaniam)
பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ குறித்த பிரச்சாரங்களை, மூளைச் சலவைகளை தொடர்ந்து அனுமதித்து வந்தால் புத்தர், மகாவீரர், வள்ளலார், காந்தி, தெரேசா, பிரபாகரன் என்று அந்த லிஸ்டில் பெயர் சேர்த்து விடும் அளவுக்கு கொண்டு போய் விடுவார்கள். பிரபாகரன் வாழ்வு பற்றி கேள்விப்பட்டு அதில் உந்தப்பட்டுதான் நெல்சன் மண்டேலாவே அகிம்சை வழியைக் கைக்கொண்டார் என்று தமிழக வரலாற்றில் இடம் பெற்று விடும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய பிரபகாரன் என்று செய்யுள்கள் இயற்றப்பட்டு விடும்.
கொரனாவின் வறுமை…. இந்தியாவில்
(Rathan Chandrasekar)
ஜார்கண்ட்,
தன்பாதிலுள்ள பன்ஸ்முரி கிராமம்.
அங்கே செங்கல் சூளைத் தொழிலாளர்கள் நடுவே –
தலையில் செங்கற்கள் சுமந்து நடந்துவரும் இருபது வயதான ‘பழங்குடி இன’த்தைச் சார்ந்த இளம்பெண்ணைப் பார்த்து பெருமூச்செறிகிறார்கள் கிராமவாசிகள்.
விவரமறிந்த வெளியூர்க்காரர்கள் திகைத்துப் போகிறார்கள்.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் கொரோனா
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் கொரோனா, பாதிப்பிலும் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதிவழங்கிய முகாம் மக்கள்
தமிழகத்தில் 107 முகாம்கள் அமைந்துள்ளன,இவை தமிழக மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அண்;ணமையில் அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.முகாம் குடியிருப்புகள் ஆனது மிகவும் நெருக்கமாக தொகுப்புகளாக அமைக்கப்பட்டள்ளது. .இதனால் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால்,மற்றவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது.
கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)
(தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)
வை.எல்.எஸ்.ஹமீட் எனும் முஸ்லீம் அன்பரொருவர் தனது முகநூலில் சாணக்கியன் உட்படத் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்முனைப் பிரச்சனை குறித்த தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். சாராம்சத்தில் அவர் கூறியிருக்கும் பிரதான விடயங்கள் இரண்டு. ஒன்று, சாணக்கியன் உட்படத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்முனையின் வரலாறு சரிவரத் தெரியாது என்பது.