ஈகைத் திருநாள் வாழ்த்துகள்……

(சாகரன்)

அனைத்து முஸ்லீம் மக்களுக்கும், நட்புகளுக்கும், தோழமைகளுக்கும், உறவுகளுக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள். மத நம்பிக்கைகளுக்கு அப்பால்… மார்க்க நம்பிக்கைகளுக்கும் அப்பால்…. மனங்களை நேசிக்கும் மனித நேயப் பண்பால் சகோதரத்துவ உணர்வால் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வதில்… இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ந்திருக்கின்றேன்.

தமிழகத் தலைவர்கள், இலங்கை தமிழர்களை மறந்து விட்டார்களா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், முன்னைய தேர்தல்களை விட, சில முக்கிய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அதில் முக்கியமான வேறுபாடு, நீண்ட காலமாக மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் தலைவர்களாக இருந்த, இரு முக்கிய நபர்களின்றி இத்தேர்தல் நடைபெற்றது.

கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமும் ஓர் அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா வைரஸ் தொற்றின் ‘மூன்றாவது அலை’ பரவல் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கட்டமும் ஏற்கெனவே ஏற்படுத்திய பாதிப்புகளைவிட, இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 24 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு தென்கிழக்கே 642 கிமீ தொலைவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சரியாக இன்று பிற்பகல் 12.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை

‘பாலை நிலமாகும் யாழ்ப்பாணம்’

(சிக்மலிங்கம் றெஜினோல்ட்)

“வலு கெதியில யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று சில ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள் சூழலியலாளர்கள். இது சீரியஸான உண்மையே. ஆனால், யார்தான் உண்மையை மதிக்கிறார்கள்! பாலையாகினால் என்ன? சோலை வரண்டால் என்ன? கிடைப்பது பொக்கிஷம். எடுப்பதையெல்லாம் அதற்குள் எடுத்துக் கொள்வோம் என்று பனைகளை வெட்டுகிறார்கள். மணலை அகழ்கிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள். போதாக்குறைக்கு கடலோரங்களையும் களப்புக் கரைகளையும் கூடத் தங்கள் இஸ்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு வளமான செம்மண் தோட்ட நிலங்களையெல்லாம் கடைகளுக்கும் குடியிருப்புகளுக்குமாக எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து கொண்டே போனால் இந்தச் சின்னஞ்சிறிய யாழ்ப்பாணக் குடாநாடு பாலையாகாமல் வேறு எப்பிடியாகும்?

திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம்

திராவிடக் கட்சிகளின் ஆளுமை மிக்க தலைவர்களான ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் மறைந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சிகள் தங்களின் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பதிவான வாக்குகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் 67.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அமமுக, மதிமுக ஆகிய சிறிய திராவிடக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்தம் 70.4% வாக்குகள். இதுதான் திராவிடக் கட்சிகள் இதுவரை பெற்றிருக்கும் இரண்டாவது அதிகபட்ச வாக்குவீதம்; திராவிடக் கட்சிகள் 2016-ல் பெற்ற இதுவரையிலான அதிகபட்ச வாக்குவீதமான 73.9%-ஐவிட இது 3.5% மட்டுமே குறைவாகும். திமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட திராவிடக் கட்சிகள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பது நம் கவனத்தை அதிகமாகக் கவர்கிறது.

சாணத்தில் குளித்து, கோமியத்தை அருந்தும் முட்டாள்தனம்

சாணத்தில் குளித்தல், சாணத்தை அள்ளி உடல்முழுவதும் தேய்த்துக்கொள்ளல், கோமியத்தைக் குடித்தல், அதில் நீராடுதல் தொடர்பிலான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள், இந்திய ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. சாணமும் கோமியமும் விஷகிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகளாகவே, முன்னைய காலங்களிலிருந்து பார்க்கப்படுகின்றன.

இன்று நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

(வரதராஜா பெருமாள் அவர்களினால் கல்முனையில் இருந்து வெளிவரும் கல்முனைநெற் எனும் பத்திரிகைக்கு அளித்த பேட்டி) 09-04-2021 ல் வெளியிடப்பட்டது

கேள்வி:- வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமா?

பதில்:- சர்வதேச அரசியலிலும் சரி உள்நாட்டு அரசியலிலும் சரி சாத்தியமாகாது எனக் கருதப்படும் விடயங்கள் ஒரு நீண்டகால வரலாற்றோட்டத்தில் சாத்தியமாகவும் கூடும். எனவே இது சாத்தியமாகும் – சாத்தியமாகாது என வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு பற்றி எதனையும் ஒற்றை வசனத்தில் கூறிவிட முடியாது. உலக வரைபடத்தில் இருந்த பல நாடுகள் காணாமற் போய்விட்டன – இல்லாமல் இருந்த பல நாடுகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், இன்று இலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

கரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை மாற்ற பாஜக மேலிடம் திட்டம்?

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோரின் அலட்சியத்தாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.