
Month: June 2021
பாசிசம் மூழ்கடிக்கத் துடிக்கும் இலட்சத்தீவுகள்
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் வைத்த ‘தீ’
(சாகரன்)

கிராமங்கள் தோறும் ஏன் ஊரகங்கள் தோறும் சில நகரம் ஈறாக ஒரு காலத்தில் சன சமூக நிலையங்கள் என்று ஒன்று தோற்றுவாய் பெற்றிருந்தது. மக்கள் தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை ஒரு பொது இடத்தில் சந்தித்து அளவளாவுதல் ஏன் சற்று இளைப்பாறுதல் என்று ஆரம்பமானதே இந்த சன சமூக நிலையங்கள். ஆரம்பத்தில் மிக அடிப்படையான வசதிகளை தன்னக்தே கொண்டு இவை உருவானதாகவே வரலாறு உண்டு. இதன் வடிவங்கள் உலகம் பூராகவும் உண்டு.