நாட்டில் மேலும் ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Month: June 2021
பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று காலை 7.30 மணியளவில் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டெல்லி செல்லும் அவர், இன்று காலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கட்சியின் அலுவலகத்தையும் அவர் பார்வையிடுவார்.
திரும்பி பார்க்க வைத்த திம்பு பேச்சுவார்த்தை
லாட்டரிச் சீட்டு போதை.
ஈழமும் திராவிடமும்
(Suguna Diwakar)
சமூக வலைத்தளங்களில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க.வினருக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியினரும் சில ஈழத்தமிழர்களும் கலைஞரையும் தி.மு.க.வையும் தனிப்பட்ட முறையில் வசைபாடி பின் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகளையும் வசைபாடும் நிலைக்குச் சென்றதையும் அதற்கு எதிர்வினையாகத் தி.மு.க.வினரில் ஒருபிரிவினர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் விமர்சனம் என்பதைத் தாண்டி தனிநபர் இழிவுபடுத்துதல் என்ற எல்லைக்குச் செல்வதையும் காணமுடிகிறது.
இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 11)
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்..எவ்.நெற், சூத்திரம்.கொம், தேனீ.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனிப்புக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.
இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் டொலர் நிதியுதவி
இலங்கை அகதிக் குடும்பத்தை விடுவித்தது அவுஸ்திரேலியா
திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி
(என்.கே. அஷோக்பரன்)
எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக, அந்நாட்டின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தமிழ்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸாரும் மத்திய புலனாய்வு பிரிவினரும் இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குறித்த ஆயுத குழு எது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை