துருக்கியிடம் காபூல் விமான நிலையம்?

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) நட்புறவு நாடுகள் ஆதரவளித்தால், ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்க துருக்கிப் படைகள் இணங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார். நேட்டோ நட்புறவு நாடுகளுடனான சந்திப்பொன்றிலேயே குறித்த கருத்தை அகர் வெளிப்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இவ்விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அங்குள்ள 500 துருக்கிப் படைகள் ஏற்குமென அகர் தெரிவித்துள்ளார். நிதி, உபகரண, அரசியல் ஆதரவானது நட்புறவு நாடுகளால் வழங்கப்பட்டாலேயே பொறுப்பை துருக்கி ஏற்குமென அகர் கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 101-ஆல் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்று காலை 11 மணிக்கு, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,011-ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.  

தோழர் ரவீந்திரநாத்

(Rathan Chandrasekar)

எப்போது உறங்குகிறார் இவர்?
எப்போது விழிக்கிறார்?
வீட்டிலா, மருத்துவமனையிலா,
இல்லை, போராட்டக்களத்திலா…
இப்போது எங்கு இருப்பார்?

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 143 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சீனாவின் பொறிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கை

இலங்கை தான் ஒரு புதிய அணிசேரா நாடு என்று 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தது. ஆனால் தற்போது தனது இறையாண்மையை சீனாவிடம் கையளித்துவிட்டது என்றே தோன்றுகிறது. விசேடமாக ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்த பிறகு, சீனா இலங்கையை தங்க முட்டையிடும் வாத்தாகக் கருதியது கடன்களையும், அபிவித்தித் திட்டங்கள் என்ற பெயரில் நாட்டின் அனைத்துத் திட்டங்களிலும் தனது கால்களைப் பதிக்கத் தொடங்கியது மட்டுமன்றி, கடனுதவி என்ற பெயரில் பணத்தை வகை தொகையின்றி வாரி இறைக்கத் தொடங்கியது. இங்கே பாரிய வருமானத்தை ஈட்டிக்கொண்ட நிறுவனமாக China Harbour Engineering Company (CHEC) திகழ்ந்தது என்பது வெள்ளிடை மலை.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. 10 இலட்சம் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(09) அதிகாலை 5.02 மணியளவில்  வந்தடைந்துள்ளது.

‘வவுனியா பல்கலைக்கழகம்’

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஏற்பாடு

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறைக்குள், சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

லண்டன் (கனடா) துயர்!

ஜூன் 6 கனடா வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அமைதியான ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் , மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் குடும்பமொன்றின் நான்கு உறுப்பினர்களை முஸ்லிம் இனத்தின் மீது வெறுப்புணர்வு மிக்க இருபது வயது இளைஞன் ஒருவன் தனது ‘பிக் அப் ட்ரக்’கால் மோதிக்கொலை செய்துள்ளான். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 9)


2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வடக்கு மாகாண சபை செயற்படத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் எழுதப்பட்டதே இக்கடிதத் தொடர். இதில் 12 கடிதங்கள் உள்ளன. இவை முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ். நெற், சூத்திரம்.கொம், தேனி.கொம் ஆகிய இணையத் தளங்களில் வெளியிடப்பட்டவை. இக்கடிதங்கள் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் சமூக விடயங்களோடு தொடர்பு பட்டவர்களின் கவனத்துக்கும் கருத்துக்கும் பொருத்தமானவை என்று கருதுகிறேன் . எனவே இக்கடிதத் தொடரை இங்கு ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்கிறேன்.