களுகங்கையையும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தையும் இணைத்து மலைகளுக்கு அடியில் இரண்டு பக்கங்களிலும் இருந்து தோண்டப்பட்ட இலங்கையின் மிக நீண்ட சுரங்கம் நடுவழியில் சந்தித்துள்ளது. மொத்தம் 7.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கம் இலங்கையில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு அத்தியாயமாகும். மொத்தமாக 28 கிலோமீட்டர் சுரங்கப் பாதைகள் இந்த திட்டத்தில் அமைக்கப்படவுள்ளதோடு இறுதியில் மஹாவலி நதியும் கனகராயன் ஆறும் இணைக்கப்பட்டு முழுமையான ஒரு வடக்கு தெற்கு நீர்வழியிணைப்பு ஏற்படுத்தப்படும். ஹீரடிய ஓயாவுக்கு மேலால் அமைக்கப்படவுள்ள 400 மீற்றர் நீளமான (Aqueduct )நீரிணைப்பாலம் மிகவும் அழகான காட்சியை இலங்கை மக்களின் கண்ணுக்கு விருந்தாக்கும்.
Month: July 2021
அறிவற்ற மோட்டுப்பயல்களால் நாசமாகிப்போன இலங்கை- இந்திய ஒப்பந்தம்.
34 வருடங்கள் ஓடிவிட்டது
இதில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளில் பத்தில் ஒன்று கூட எக்காலமும் இனி கிடையாது . உலகில் பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் இருக்கும் தவறுகள் போல இதிலும் இருக்கு ஆனால் அதில் இருக்கும் பெரும்பான்மை விடயங்கள் தமிழர்களுக்கு சாதகமானவை.
ஒப்பந்தத்தை குழப்பிய பின் ஏற்பட்ட அழிவுகள் எமது ஆயுதபோராட்டத்தின் மொத்த அழிவின் தொண்ணூறு சதவீதத்திற்கு மேலானது.
மறக்கப்பட முடியாத 1983 ஆடிக் கலவரம்…
(சாகரன்)
நேரடியாகவோ மறைமுகமாகவோ 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். கலவரமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலை தொடர்ந்து வேகமெடுத்த ஆயுதப் போராட்டதிற்குள் நேரடியாக பங்காளிகளாகி பலர் இல்லாவிட்டாலும் இதன் உணர்வலைகளுக்குள் உள்ளாகாதவர்கள் என்று தமிழ் பேசும் இலங்கை மக்களை நாம் பிரித்துப் பார்க்க முடியாது.
‘சம்பந்தனின் மரணத்துக்காக காத்திருப்பவன் நானல்ல’
“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். கிழக்கு மாகாணம் தொடர்பில் பரந்த திட்டங்களுடன் தாம் செயற்படுவதாக தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தின் சுபீட்சம் நோக்கியே தமது பயணம் உள்ளதாகவும் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பில், மட்டக்களப்பில் வைத்து, நேற்று (28) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு செயலாளர் நியமனமும் ராஜபக்ஷர்களின் திட்டமும்
வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே, வவுனியா மாவட்டத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். ராஜபக்ஷர்களின் ஆட்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக, முன்னாள் படைத்துறை அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஏற்கெனவே, ஜி.ஏ. சந்திரசிறி வடக்கு ஆளுநராக ஆறு வருடங்கள் அளவில் பதவி வகித்திருக்கின்றார்.
சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு
(என்.கே. அஷோக்பரன்)
போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று.
சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான சர்வதேச வருடமும் ஹிஷாலினியும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டில், பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி எனும் சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளாகி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்தச் சிறுமி, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
ரிஷாட் கட்சியுடன் கூட்டணிக்கு இடமே இல்லை: சஜித் அதிரடி பதில்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியவர்கள் ரிஷாட் பதியுதீனின் கட்சிக்குள் இருக்கும் வரையிலும். தற்போது முகங்கொடுக்கும் பல்வேறான சிக்கல்கள் தீர்வுக்கு கொண்டுவரப்படும் வரையிலும் அந்த கட்சியுடன் எந்தவோர் கூட்டணியும் அமைக்கப்படாது. என எதிரக்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கோமாளிகள்: சயந்தனை மேடையில் உட்கார வைத்து விளாசிய முதலமைச்சர்!
வெலிப்படை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டவர்களின் 35வது நினைவுதினம் இன்று ரெலோவினால் அனுட்டிக்கப்பட்டது. கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடந்தது.இதில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் உரையாற்றியபோது, வடமாகாணசபையின் கடந்த அமர்வை காட்டமாக விமர்சித்தார்.