காரைதீவுக்குட்பட்ட நன்செய் நிலப்பிரதேசத்தில் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் கார்பெட் வீதிப் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென காரைதீவின் பொதுநல அமைப்புகள் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளன.
Month: July 2021
வீரவன்ச, கம்மன்பில இருவருக்கும் அதிரடி வைத்தியம் செய்கிறது அரசாங்கம்
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. அவ்விருவரிடமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
தமிழ் நாடு: பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை
சீனா vs இந்தியா: இலங்கையின் உண்மையான நண்பன் யார்?
(ரஞ்சன் அருண் பிரசாத்)(பிபிசி தமிழுக்காக)
சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதுமாத்திரமன்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது.
பயணிக்கும் சுயஸ் கால்வாயை முடக்கிய கப்பல்
சுயஸ் கால்வாயை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் முடக்கிய பாரிய கொள்கலன் கப்பலொன்றானது இறுதியாக சுயஸ் கால்வாயை விட்டு வெளியேறுகின்றது. கப்பலின் உரிமையாளர்கள், காப்புறுதியாளர்களுடன் இழப்பீட்டு ஒப்பந்தம் ஒன்றை எகிப்து கைச்சாத்திட்டத்தையடுத்தே குறித்த கப்பல் வெளியேறுகிறது. கப்பலானது மூன்று மாதங்களாக கால்வாய் நகரமான இஸ்மைலியா நகரத்துக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்காத நிலையில், 550 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை எகிப்து கோரியிருந்தது.
வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி
அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு
சட்ட விரோத மணல் அகழ்வு; 13 படகுகளுடன் மூவர் சிக்கினர்
இலங்கை: கொரனா செய்திகள்
தற்போது கணிசமான சதவீதமானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சனத்தொகையில் பெருமளவானோருக்கு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெசிலிடம் இருந்தவை மஹிந்தவுக்கு மாற்றம்
நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பெசில் ராஜபக்ஷவுக்கு கீழிருந்த நிறுவனங்கள் சில, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழிருக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான, சட்ட கட்டமைப்பை திருத்தி சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பெசில் ராஜபக்ஷவும், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், நேற்று முன்தினம் (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.