அரசாங்கத்துக்கு எதிராக யாழில் இன்று கவனயீர்ப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில், இன்று (10) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படுமென புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் அறிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

மொட்டை கைவிடுகிறது ‘கை’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயகம் ஆசிரியர் ஜோர்ச் எழுதியுள்ள கட்டுரை…

புலிகளின் யுத்தம் தோல்வியில் முடிந்து, ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு, ஒரு திருட்டு அயோக்கியர் கூட்டத்திடம் தமிழ் அரசியல் ஒப்படைக்கப்பட்ட துயரநிலைக்கு, நீங்கள் புலி ஆதரவாளர்களினதும், அவர்களது வாய்க்குள் சொற்களைத் திணிக்கும் புலன் பெயர்ந்த அரசியல் புல நாய்வாலர்களினதும் வியாக்கியானங்களை நாளிது வரை வாசித்திருந்தீர்களாயின், சர்வதேசம், 32 நாடுகள், துரோகிகள், நோர்வே, சோல்கெய்ம், சோனியா, சுமந்திரன், யசூகி அகாசி, அசின் என்று பெரிய லிஸ்டே இருக்கும்.

சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்‌ஷர்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை வெளிப்படுத்துவது உண்டு.

இது இலங்கை அரசியல் வரலாற்றில முதல்தடவை;

இன்று ஆரம்பம்-08/07/2021- பசீல் ராஷபக்‌ஷவின் பாராளுமன்ற பிரவேசத்துடன் ஆரம்பமாகியுள்ளது..! இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஒரேதடவையில் இருப்பது இதுவே முதல்தடவை

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘பாவம்’ பாண்டி ஆறு: வந்தால் போகமுடியாது; போனால் வரமுடியாது

(பலாங்கொடை மஹிந்த குமார்)

இரத்தினபுரி, பம்பரளகந்த பிரதேசத்தில் ‘சலசல’ எனப் பாய்ந்தோடும் பாண்டி ஆற்றை கடந்து செல்ல, பாலம் இல்லாமையால், பாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை.