புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், வேணாவில், கைவேலி ஆகிய கிராமங்களை இணைத்து, சௌபாக்கிய உற்பத்தி கிராமத்துக்கான ஆரம்ப பணிகள், இன்று (05) முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, தோல்பொருள்கள், பற்றிக் உற்பத்திகள், ஆடை உற்பத்திகளை மேற்கொள்வதற்காக பொதுகட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் நாட்டிவைத்தார்.
Month: July 2021
‘ 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளன‘
மாத்தளை மாவட்டத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2019ஆம் ஆண்டு 3,346 பலாமரங்களும் கடந்தாண்டு 2,593 மரங்களும் வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் சுகாதார தொழிற்சங்கங்கள்
14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின் பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சும் வேண்டுமென்றே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதால், இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதென, மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சபையின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை 8 மணியிலிருந்து இத்தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றார்.
சூர்யாவுக்கு எதிராக தீர்மானம்!
மாணவர்களைக் குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வரும் நடிகர் சூர்யா, மத்தியஅரசாங்கம் கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை, உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்படாத 182 புதைகுழிகள் கண்டுபிடிப்பு
இலங்கை: கொரனா செய்திகள்
’கொச்சைப்படுத்துவது போல் தெரிகிறது’
‘வெளிநாட்டுப் படைகளின் தலைகள் துண்டிக்கப்படும்’
ஐரோப்பிய பிரேரணையும் கைதிகளின் விடுதலையும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஐரோப்பிய நாடாளுமன்றம், ஜூன் 10 ஆம் திகதி, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணை, இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது போலும்! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகவும் எனவே, இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகைகளை நிறுத்த வேண்டும் எனவும், அந்தப் பிரேரணை மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்திருந்தது.