டெல்லி வந்திருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்திருந்தார். அப்போது, மறைந்த கலைஞர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பாராட்டி பேசினாராம் ஜனாதிபதி.’
Month: July 2021
மனோரி முத்தட்டுவேகம
மறைந்த மனோரி முத்தட்டுவேகம அவர்கள் இனநல்லுறவு மனித உரிமை மனிதகண்ணியத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். ஒரு முன்னேற்றகரமான மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். பரஸ்பர மரியாதை இங்கிதம் நல்லியல்பு அவரது பின்புலத்தின் உயர் விழுமியங்களை பறை சாற்றின.
1980களின் முற்கூற்றில் 1983 இற்கு முந்திய பாராளுமன்றத்தில் இனசமூக நல்லுறவிற்கு நம்பிக்கைதரும் வார்த்தைகள் ஏதும் இருந்ததென்றல் அவரது கணவர் தோழர் சரத் முத்தட்டுவேகம இலங்கைகம்யூனிஸ்ட் கட்சிஅவர்களிடம் இருந்துதான். அவர் பாரதப்போரில் எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்ட அபிமன்னுவைப்போல் இனசமூக நல்லுறவிற்காகவும் அனைத்துமக்களின் உரிமைக்காகவும் போரிட்டார். அவருடைய தகப்பனார் கொல்வின் இலங்கையின் இனசமூக உறவுகளூக்கு பாதகமான தனி சிங்கள சட்டம் பிரிவினக்கு வழிவகுக்கும் என 1950 களில் இலங்கை பாராளுமன்றத்தில் முன் எச்சரிக்கை செய்தவர். அற விழுமியங்களின் பாரம்பரியம் அவரை செதுக்கியது. அவர்களது புதல்வி ரமணி மனித உரிமை ஜனநாயகம் பெண் உரிமை செயற்பாட்டாளர்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின்மறைவிற்கு எம் அஞ்சலிகள்!
சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? – நேர்காணல்
(பா. நிரோஸ்)
டயகம சிறுமியின் மர்ம மரணம்:
பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு?
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார்.
இலங்கை: கொரனா செய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 937 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன்படி 267,602 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,194 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும்
கறுப்பு ஜூலை நாளன்று தோண்டப்பட்ட ‘தமிழ்க்கண்’
மலையகச் சிறுமிக்காக யாழில் திரண்ட மக்கள்
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ். நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.