கொரோனா வைரஸின் நான்காவது அலையின் முதல் பாதியை இலங்கை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார். அத்தடன், கொழும்பில் 30 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
Month: July 2021
‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் கர்ப்பம் தரிக்காது இஷாலினி வன்புணர்வு’
ஐரோப்பிய வெள்ளங்கள்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180ஆக அதிகரிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நேபாள பிரதமர்
நேபாள பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அந்நாட்டின் புதிய பிரதமர் ஷேர் பகதுர் டெயுபா பெற்றுள்ளார். அந்தவகையில், அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் அதிகாரத்தில் டெயுபா தொடரவுள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் கீழ்ச் சபையில் 165 வாக்குகள் பிரதமர் டெயுபாவுக்கு ஆதரவாகக் கிடைத்ததாகவும், 83 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததாகவும் சபாநாயகர் அக்னி சப்கொடா அறிவித்துள்ளார். சீனாவுடனான உறவுகளை முன்னாள் பிரதமர் கஹட்கா பிரசாத் ஒளி விரும்பியிருந்த நிலையில், இந்தியாவுக்கு அருகில் நேபாளத்தை பிரதமர் டெயுபா கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
’மாகாண எல்லைகளை கடக்க முடியாது’
இலங்கை: கொரனா செய்திகள்
இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது?
1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள், டீ கடை நாயர்கள், படிப்பிற்காக வருபவர்கள், மருத்துவத்துக்காக வருபவர்கள்
2. பிகார் மாநில தொழிலாளர்கள்
3. அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள்
4. ஆந்திராவில் இருந்து வரும் சாலை பணியாளர்கள்
5. சிவகாசி மற்றும் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள்
6. பேங்குகளில் பணியமர்த்தப்படும் வட இந்திய பணியாளர்கள்
7. எல்லா TOLL GATE களிலும் நிற்கும் பக்காவான வேறுமாநில ஊழியர்கள்
8. பெரிய ஊர்களெங்கும் கடை வைத்து வியாபாரத்தை விரிவாகியிருக்கும் வட இந்திய வணிகர்கள் நகை கடை காரர்கள், ஊழியர்கள்
9. பானி பூரி விற்பவர்கள் (அய்யோ ஓஓஓஓ )
10 இவ்வளவு ஏன் சிஃனலில் சுற்றி திரியும் ஏழைகள், பலூன் விற்பவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள்
இவர்கள் அனைவரையும் கேளுங்கள் இந்தியாவில் வாழ சிறந்த இடம் எதுவென்று ?
தயக்கமின்றி நம் தமிழ்நாட்டை கை காட்டுவார்கள்
இந்திய நீர்மூழ்கி தூத்துக்குடி வருகை
யாழுக்கு பிரதமர் விஜயம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
‘250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி’
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300க்கும் அதிகமான அட்டைப்பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் நிருபராஜ்,கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.