மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
Month: July 2021
வாய்ப்பு கேட்கத் தெரியலை… அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!” – பாடகி ஜென்ஸி
அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்
அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் -பெயரைச் சொன்னால் கோவித்துக்கொள்வார்.தம்பட்டம் அடிக்கவேண்டுமா என்று சினப்பார்.
கோவையில் அவர் இளைஞனாய் உலவிய காலத்தே -கட்சி கட்சி என்று செங்கொடி பிடித்து அலைவதையும் -முழு நேர ஊழியராகி, கட்சிக்கு உழைக்கப்போகிறேனென்று ஒற்றைக்காலில் தவமிருந்ததையும் கண்ணுற்ற பெற்றோர் -அவரை திசை திருப்புவதற்காக எண்ணி மாய்ந்தனர்.
ஏதாகிலும் ஒரு வருவாயீட்டும் பணியில் இணைத்துக் கொண்டு விடுவானாயின், ‘திருந்தி விடுவான்’ என்று பகீரத முயற்சிகள் செய்ய -அந்தத் தோழர் என்ன செய்தார் தெரியுமா?தன் கையை எரியும் நெருப்பில் கருக்கிக் கொண்டார்!அதிர்ந்து போன பெற்றோர் வாயடைத்து நின்றனர்.அதுபோழ்தில் – ஒருநாள் – புலர்காலையொன்றில் அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புதன் பேச்சு
புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக்
இன்றைய யதார்த்தம்….
குடும்ப ஆட்சியும் இலங்கையும்
(என்.கே.அஷோக்பரன்)
சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,
3 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்
‘தோட்டத் தொழிலாளர்களைத் தோட்ட அதிகாரி, சர்வாதிகாரமாக நடத்துகின்றார்‘ எனத் தெரிவித்து, குறித்தஅதிகாரியையும், அத்தோட்ட தலைமை குமாஸ்தாவையும் உடனடியாக இடமாற்றம் செய்யகோரி, தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ட்றூப்,கொரின் தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக 3 வது நாளாகவும் நேற்று (14) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’கடலட்டை பண்ணைகள அமைக்க ஏற்பாடு’
வடமாகாணத்தில், நுற்றுக்கணக்கான கடலட்டை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்: வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இயக்கச்சியில், இயக்கி உணவகத்தை, இன்று(15) திறந்துவைத்தப் பின்னர் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவி;தார்.
இலங்கை: கொரனா செய்திகள்
கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.