(இராமச்சந்திர மூர்த்தி.பா)
தோழர்கள் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு
100 வது வயதில் அடி எடுத்து வைக்கும் தோழர் புரட்சியாளர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் என பல்வேறு கோணங்களில் போற்றப்படும் தோழர் சங்கரையா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
The Formula
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின்ற ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், நேற்று (13) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பெரிதாக எதுவும் நடக்கவில்லை எனின் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டை முழுமையாகத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செப்டெம்பர் மாதத்துக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
(Sutharsan Saravanamuthu)
பிறப்பு 26 08 1927 – இறப்பு 13 07 1989
மலேசியாவில் பிரிட்டிஷ் ரயில்வேயில் ஒரு ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய அப்பாப்பிள்ளைக்கு 26 08 1927 இல் அமிர்தலிங்கம் மகனாகப் பிறந்தவர் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் கல்வி கற்று ,அந்தக் கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவரும் அவரேயாவார். கலைமாணி படிப்பை முடித்துக்கொண்டவர் பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வழக்கறிஞராக வெளியேறியவர்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி ரி. மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வராக நீண்ட காலமாக கடமையாற்றிய கலாநிதி ரி. மங்களேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழக உருவாக்கத்துக்கு அயராது உழைத்தவராவார்.
தலிபான் ஆதிக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.