
ஆப்கானில் 8 டிரில்லியனிற்கும் அதிகமான இயற்கை வளங்கள் உள்ளன.உலகில் அதிகமான லிதியம் படிமங்களும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றை அகழவேண்டும்.
The Formula
(அ.வரதராஜா பெருமாள்)
வீழ்ச்சி நிலையில் பொருளாதார வளர்ச்சி
உரிய வேலைவாய்ப்பு கேட்டு
தொடர்ந்து அதிகரிக்கும் இளைஞர் படை
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பிரதானமாக வேலையில்லாத இளைஞர்களின் வீதாசாரம் வீழ்ச்சியடைதல், வறியநிலையில் வாழும் மக்கள் தொகையினரின் வீதாசாரம் குறைதல், நாட்டு மக்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கைத் தரம் உயர்தல் ஆகியனவற்றை மொத்தத்தில் குறிப்பதாக அமைதல் வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தர உயர்ச்சி என்பது வெறுமனே பண வருமானத்தின் உயர்ச்சியை மட்டும் கருத்திற் கொண்டதல்ல. பண வருமான உயர்ச்சியை அவதானிக்கின்ற போது பண்டங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும், அந்நியச் செலாவணி மாற்று விகிதம் தொடர்பாகவும் அந்த வருமானத்தின் உண்மையான பெறுமதியில் ஏற்பட்டிருக்கும் உயர்ச்சி மதிப்பிடப்படுதல் வேண்டும்.