ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.
Month: August 2021
நினைவஞ்சலி
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்(பகுதி – 2)
(அ. வரதராஜா பெருமாள்)
சுயசார்பு நிலையை அடைய முடியவில்லை
அடிப்படை வாழ்வுரிமைகளுக்கு உறுதியில்லை
‘இலங்கையானது ஒரு பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இருப்பதற்குப் போதிய அளவுக்கு வயல் வளங்கள், வன வளங்கள், பல்வகை மண் வளங்கள் என நிலவளங்களையும் – அத்துடன், கடல் வளங்கள், நதிகள், ஏரிகள், குளங்கள் என பல்வகை நீர்வளங்களையும் கொண்டது. மேலும், நாட்டின் மத்தியிலே பரந்த பசுமையான மலைகள் அவற்றிலிருந்து எட்டுத் திசைகளிலும் நீரோட்ட நரம்புகளாய் நதிகள் பாய்கின்றன. உலகின் பெருந்தொகையான நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல்வேறு வகை விவசாய உற்பத்திகளையும் ஆண்டு முழுவதுவும் மேற்கொள்வதற்கு உரிய வகையில் இலங்கை மிகச் சாதகமான காலநிலைமைகளையும் கொண்ட நாடு.
இலங்கை: கொரனா செய்திகள்
ஏங்கெல்ஸ் எனும் தியாக தீபம்
(அ.அன்வர் உசேன்)
உலகம் முழுதும் உள்ள பொதுவுடமைப் போராளிகளுக்கு வழிகாட்டும் ஆசான்களான மார்க்சின் பெயர் உச்சரிக்கப்படும் பொழுது ஏங்கெல்சின் பெயரும் இணைந்தே வருவது தவிர்க்க முடியாதது. அந்த அளவிற்கு இருவரும் சமூக மற்றும் அரசியல் தளங்களில் இணைந்து செயல்பட்டனர். அதனால்தான் லெனின் கூறினார்:‘‘புராதன இதிகாசங்கள் உன்னதமான நட்பைப் பற்றி பல உதாரணங்களைப் பேசுகின்றன. எந்த ஒரு இதிகாச மனித நட்பைவிட மிகச்சிறந்த நட்பை கொண்டிருந்த இரண்டு மகத்தான அறிஞர்கள் மற்றும் போராளிகளால்தான் தனது வர்க்கத்தின் அறிவியல் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன எனத் தொழிலாளி வர்க்கம் பெருமைப்படலாம்!’’
வறுமையும் அரசியலும்
(என்.கே. அஷோக்பரன்)
ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன?
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
(தோழர் வை. அழகலிங்கம்)
வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை விவாதிக்கின்றனர்பள்ளி ஆசிரியர்களின் ஆன்லைன் கற்பித்தல் வேலைநிறுத்தம் ‘ஊதிய முரண்பாடுகளை’ நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளுடன் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வேலை நிறுத்தம் தொடங்கி 18 நாட்கள் ஆகிவிட்டன.