ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன.
Month: August 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதை துரிதப்படுத்துவதால் ஜி -7 அவசர உச்சி மாநாட்டை நடத்தியது
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல..
சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.
ஆப்கன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது?
ஆப்கன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது?பிடென், ஆப்கன் வெளியேற்றக் கொள்கையை ஐரோப்பிய அரசுகள் ஏற்க மறுக்கின்றன. காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவ இருப்பை நீடிக்கவும், மற்றும் ஆப்கானிஸ்தானின் தலைநகரிலிருந்து நீண்ட மற்றும் விரிவான வெளியேற்றத்தை வழங்கவும், பிடென் நிர்வாகம் அமெரிக்காவில் ஆளும் வட்டங்களுக்குள்ளும் மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளிடமிருந்தும், குறிப்பாக பிரிட்டனிலிருந்தும் அதிக அழுத்தத்தில் உள்ளது.
‘தாலிபன்களை எதிர்க்கத் தயார்’ – சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குழு ஒன்று, இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிடத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan -NRF) எனும் இந்த அமைப்பின் வெளி விவகாரங்கள் பிரிவு தலைவர் அலி நசாரி அமைதியான பேச்சுவார்த்தையைத் தொடரவே தாங்கள் விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
71 ஆண்டுகளுக்கு பின்னர் எட்டிப் பார்த்த மழை
கிரீன்லாந்திலுள்ள பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், கடந்த 14 முதல் 16ஆம் திகதி வரை மொத்தம் 7 பில்லியன் தொன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தீவு முழுவதும் பரவலான பனி உருகல் ஏற்பட்டுள்ளதாக மூத்த விஞ்ஞானி வோல்ட் மேயர் கூறியுள்ளார். அதே வேளை பனிக்கட்டிகள் உருகிவரும் வீதம் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலிபான்களுக்கு எதிராக தேசியக்கொடி ஏந்தி போராட்டம்
தலைதூக்கும் துப்பாக்கிகள்
இலங்கை: கொரனா செய்திகள்
மாவட்டங்களைக் கைப்பற்றினோம்: தலிபானுக்கெதிரான படைகள்
பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்குக்கு அருகேயுள்ள மூன்று மாவட்டங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாக, வட ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடும் படைகள் தெரிவித்துள்ளன. எஞ்சியுள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கிலேயே கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.